‘அந்த ஷோ முடிந்து வெளியே வந்ததும் நிறைய அழுதேன்’ – மனம் திறந்த பிக் பாஸ் அர்ச்சனா

Bigg Boss Archana Birthday Celebration Emotional Youtube Video நான் நானாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த கடலை போன்ற பரந்த அன்பைக் கொடுப்பேன்.

Bigg Boss Archana Birthday Celebration Emotional Youtube Video Tamil
Bigg Boss Archana Birthday Celebration Emotional Youtube Video Tamil

Bigg Boss Archana Birthday Celebration Emotional Youtube Video Tamil : ‘காமெடி டைம்’, ‘இளமை புதுமை’ என சில ஜாலி ஷோக்களில் அறிமுகமாகி, 20 ஆண்டுகளாக சின்னதிரையில் கலக்கிக்கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து, தன் யூடியூப் சேனல் வீடியோக்கள் அவருடைய வளர்ச்சிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தன. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய 39-வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி தன் யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார். இதுதான் தற்போதைய ட்ரெண்டிங் காணொளி.

தன் தாயின் ஸ்பெஷல் பிறந்தநாளான இருக்கவேண்டும் என்பதற்காக பல சர்ப்ரைஸ்களை ஏற்பாடு செய்திருந்தார் அர்ச்சனாவின் மகள் ஜாரா. “மம்மி என்பது ஒரு வார்த்தை மட்டும்தான். ஆனால், அச்சும்மா என்பது எமோஷன். கடந்த 14 வருஷமா அம்மாவுடைய பிறந்தநாளை அவ்வளவு சரியாகக் கொண்டாடவில்லை. என்ன வேண்டும் என்று கேட்டால்கூட, ‘என்னிடம் எல்லாமே இருக்கிறது’ என்றுகூறிச் சென்றுவிடுவார். கடந்த ஒரு வருடமாக ஏராளமான நெகட்டிவ் கமென்ட்ஸ், ட்ரோல் என நிறைய அனுபவித்திருக்கிறார். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.

அதனால், அவருடைய இந்த 39-வது பிறந்தநாளுக்கு 39 கிஃப்ட் வாங்க பிளான் செய்திருக்கிறேன்” என்றுகூறி ஷாப்பிங் செய்ய தொடங்கிவிட்டார் ஜாரா. நாழி முதல் லைஃப்ஸ்டைல் வரை எல்லா கடைகளும் ஏறி இறங்கிவிட்டார். பிறகு அவர் வாங்கிவந்த 39 பொருள்கள் அனைத்தையும் அவரே அழகாக பேக் செய்து அடுக்கினார்.

சமீபத்தில் மிர்ச்சி எஎம் ஸ்டேஷனில் பணிக்குச் சேர்ந்த அர்ச்சனா, அவருடைய அலுவலகத்தில் அவருக்கென்று பலூன்கள் வைத்து சர்ப்ரைஸ் செய்தனர். பிறகு, சிலருக்கு ஸ்வீட்ஸ் கொடுத்துவிட்டு அப்படியே கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்புறம் என்ன, ஒரே கொண்டாட்டம்தான். இறுதியாக தனக்கு மிகவும் பிடித்த கடற்கரைக்குச் சென்றிருக்கிறார்.

“கடைசி ஒரு வருடம் என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. இவ்வளவு நாளாக பாசிட்டிவ் பெண் என்று இருந்தவளின் பெயர், ஒரு ரியாலிட்டி ஷோ மாற்றிவிட்டது. அந்த ஷோவில் இருந்து வெளியே வந்ததும் நிறைய அழுதேன். பிறகுதான் உலகம் என்ன பேசும் என்று நினைக்கக்கூடாது, நான் நானாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த கடலை போன்ற பரந்த அன்பைக் கொடுப்பேன். இந்த கடலை போன்ற பரந்த பாசிட்டிவிட்டியை பரப்புவேன்.

இதைக் கடலை எந்த மனநிலையில் நாம் பார்க்கிறோமோ, அதே போலதான் நானும். என்னை அன்பானவள் என்று நினைத்து என்னை பார்த்தால், நான் அன்பானவள்தான். வேறு எந்த விதமாக நினைத்தாலும், அப்படிதான் நான் தெரிவேன்” என்று நிறைவு செய்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss archana birthday celebration emotional youtube video tamil

Next Story
மாம்பழம், தர்பூசணி… ஃபிரிட்ஜில் ஏன் வைக்கக் கூடாது தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com