Bigg Boss Archana daughter Zara and sister Anita Youtube Video Prawn recipe : மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அர்ச்சனாவின் வருகைக்குப் பிறகு சமீபத்தில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவும் மகள் ஜாராவும் இணைந்து இறால் ரெசிபி வீடியோவை அப்லோட் செய்திருக்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகு நீண்ட நாள் சமையலறை பக்கமே செல்லாத அனிதா, முதல் முதலில் இந்த காணொலிக்காக கிச்சன் பக்கம் சென்றிருக்கிறாராம்.

அதிலும் தங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவர்க்கும் மிகவும் பிடித்த இறால் தொக்கு செய்து காட்டினர். ஆனால், ஜாராவுக்கு பிடிக்காதாம். அவருக்கு தன் பாட்டி மற்றும் பெரியம்மா செய்யும் வஞ்சரம் மீன் மட்டும்தான் பிடிக்குமாம். இந்த குறிப்புகளோடு ரெசிபியை நம்மோடு பகிர்ந்துகொண்டனர்.
தேவையான பொருள்கள்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மீடியம் சைஸ் வெங்காயம், தக்காளி – 2 (நறுக்கியது)
மல்லித்தூள் – 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
இறால் – 250 கிராம்

செய்முறை
இந்த எளிமையான ரெசிபியை 10 – 15 நிமிடங்களில் சமைத்துவிடலாம். இதற்குத் தேவையான பொருள்களும் குறைவு. ஆனால், சுவை நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும். முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை, கோல்டன் ப்ரவுன் நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இந்த மசாலா கலவையில் பனீர், காலிஃபிளவர், மஷ்ரூம், காய்கறிகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து சமைக்கலாம். ஆனால், இன்று நாம் இறாலை சேர்க்கப் போகிறோம். நம்முடைய வெங்காய தக்காளி கலவையை 3-4 நிமிடங்கள் மூடிவைத்து எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் இறாலை சேர்க்கவும். நன்கு கலந்துவிட்ட பிறகு, இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சிம்பிளான இறால் தொக்கு ரெடி. சமைக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பயண உள்ளதாக இருக்கும். அசைவம் மற்றும் சைவம் இரண்டுமே செய்யலாம்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil