Advertisment

அண்ணாமலை, அருணாச்சலம் படங்கள், புத்தகம் - பிக் பாஸ் அர்ச்சனாவின் குணமாகும் நாட்கள்!

Bigg Boss Archana healing days viral video Tamil News இதுபோன்ற ஒரு ஓய்வு யாருக்குமே இருக்கக்கூடாது. ஓடுற வரைக்கும் ஜாலியா ஒடுங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Archana healing days viral video Tamil News

Bigg Boss Archana healing days viral video Tamil News

Bigg Boss Archana healing days viral video Tamil News : ஏராளமான விமர்சனங்களைக் கடந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சர்ஜரி செய்துகொண்டு தற்போது குணமாகும் நிலையில் இருக்கும் பிக் பாஸ் அர்ச்சனாவின் ஒருநாள் எப்படி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் காணொளியாகப் பதிவு செய்து தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். 8 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் சென்றுகொண்டிருக்கும் இந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment
publive-image

காணொளி தொடக்கத்தில் தன் அம்மாவை எழுப்பி, அவரை ப்ரஷ் பண்ணச் சொல்லும் தோரணையிலிருந்து மருந்து மாத்திரைகளை அன்போடு கொடுப்பது வரை, அம்மா மீது இருக்கும் ஜாராவின் அளவில்லா அன்பும் அக்கறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் அம்மாவையும் கவனித்துக்கொண்டு தன்னுடைய வகுப்புகளையும் தவறாமல் பார்த்துக்கொள்கிறார் ஜாரா.

publive-image

 ப்ரொடக்ஷன் யூனிட்டில் இட்லி, பொங்கல், பூரி என விதவிதமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா, சாப்பிட முடியாமல் ஓட்ஸ் கஞ்சியைக் குடித்துக்கொண்டே புலம்பிக்கொண்டிருந்தார். எவ்வளவு உடல்நிலை சரியில்லாமல் போனாலும், மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம் என்று கூறிய ஜாரா, அவை என்ன என்பதையும் விளக்கினார். "இதுபோன்ற உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மருந்து, போதுமான அளவு ஓய்வு மற்றும் குடும்பத்தினரின் ஆறுதலும் அன்பும் முக்கியம். ஆனால், எவ்வளவு அன்பு கொடுத்தாலும் தாய்க்கிழவிக்கு பத்தமாட்டீங்குது" என்றபடி மருந்துகளை அர்ச்சனாவுக்குக் கொண்டுசென்று கொடுத்தார்.

publive-image

இத்தனை ஆண்டுகளாக ஓடிக்கொண்டே இருந்ததால், தன் மகளோடு இணைந்து பார்க்க நினைத்த படங்களை எல்லாம் மிஸ் செய்தவர், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணியவர், படையப்பா, முத்து, அண்ணாமலை, அருணாச்சலம் என அத்தனை படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும்போது ஜாரா கைசூப்பியது கொஞ்சம் ஓவராகதான் இருந்ததோ!

பிறகு ஜாரா வாங்கிக்கொடுத்த புத்தகம் வாசிப்பு, நடைப்பயிற்சி என நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார் அர்ச்சனா. மூக்கின் வழியாக சர்ஜரி செய்ததால் இன்னும் அந்த பகுதி அவருக்கு மறுத்துப்போய் தான் இருக்கிறது. அதனால் சாப்பிடுவதில் சிரமப்படுகிறார். "ஓடிய காலங்களில் ரெஸ்ட் வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு ஓய்வு யாருக்குமே இருக்கக்கூடாது. ஓடுற வரைக்கும் ஜாலியா ஒடுங்க. சந்தோஷமாக இருங்கள்" என்பதோடு மருந்துகளைத் தாண்டி குடும்பத்தின் ஆதரவு வேண்டும் என்றுகூறி காணொளியை நிறைவு செய்கிறார் அர்ச்சனா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigboss Archana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment