Bigg Boss Archana Youtube Channel Fridge Tour Video Tamil News
Bigg Boss Archana Youtube Channel Fridge Tour Video Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதிலிருந்து, சர்ச்சைகளில் அவ்வப்போது அர்ச்சனாவின் பெயர் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. என்றாலும், எல்லா எதிர்மறை விமர்சனங்களையும் துணிச்சலோடு எதிர்கொண்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் அவர் பதிவேற்றப்பட்ட 'பாத்ரூம் டூர்' காணொளி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்ததாக ஃப்ரிட்ஜ் டூர் ஒன்றை அப்லோட் செய்திருக்கிறார்.
Advertisment
குட்டி ஃபிரிட்ஜிலிருந்து தங்களுடைய வாழ்வாதாரம் உயர உயர அவர்களுடைய ஃப்ரிட்ஜ் அளவும் பெரிதாகிக்கொண்டே போனதாம். அந்த வரிசையில் கடந்த 6 வருடமாக அவர்கள் உபயோகித்து வரும் லீனியர் கம்ப்ரெசர் உடைய டபுள் டோர் ஃப்ரிட்ஜ்ஜைதான் நமக்கு சுற்றிக்காட்டினார் அர்ச்சனா. கூடவே தன்னுடைய மகள் ஜாராவும் இருந்தார்.
Advertisment
Advertisements
பீரோவைபோல் இரண்டு கதவுகள் கொண்ட அந்த ஃபிரிட்ஜின் ஒரு பக்கம் முழுவதும் ஃப்ரீசர். மற்றொரு பக்கம்தான் பொருள்கள் வைக்கும் கம்பார்ட்மென்ட். அதில், எப்போதாவது உபயோகிக்கும் பொருள்களை மேலே வைத்துவிட்டு, அவ்வப்போது உபயோகிக்கும் பொருள்களை நடுப்பகுதியில் வைத்திருக்கிறார்கள். ஃபுட் கலர், எசென்ஸ் வைப்பதற்கென்று தனித் தனி டப்பாக்கள். பிரித்த மசாலா பேக்கெட்டுகளையும் தனியே வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்வதனால், பூச்சி எதுவும் உள்ளே போகாது என்கிற டிப்ஸையும் வழங்குகிறார்.
ஜாராவுக்கு தண்ணீர் விடும் தயிர் பிடிக்காதாம், அதனால் தனித்தனி தயிர் டப்பாக்கள். மீந்து போகும் உணவு வகைகளை செராமிக் பாத்திரங்களில் நிரப்பி வைக்கின்றனர். காரணம்,தேவைப்படும்போது ஓவனில் வைத்து சுட வைத்து சாப்பிடதான். (இதனால்தான் அதிகமான ட்ரோல்களை சந்திக்கின்றனர் இவர்கள்!)
மேலும், மைதா, பஜ்ஜி போண்டா மாவு போன்றவற்றைத் தனியே வைத்திருக்கின்றனர். அனைத்தும் ஃப்ரிட்ஜில் இருந்தால், கிச்சனில் என்னதான் இருக்கும் என்கிற கேள்வி எழாமல் இல்லை. அடுத்ததாக, ஓர் காட்டன் பையை ஈரமாக்கி, அதில் காய்கறி மற்றும் பழங்களை சேமித்து, கடைசி ரேக்கில் வைத்திருக்கின்றனர். இது எப்போது காய்கறிகளை ஃப்ரெஷாக வைத்திருக்க உதவுகிறதாம். நாமும் ட்ரை பண்ணலாமோ!
ஃப்ரிட்ஜில் இருக்கும் பொருள்கள் பலவற்றை அர்ச்சனா தப்பு தப்பாகக் கூற, அதனை சரிசெய்துகொண்டே இருந்தார் ஜாரா. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஆர்கானிக் பால் கொடுப்பது அவசியம். அதனால், ஜாராவுக்கு தனிப்பட்ட வகையில் ஆர்கானிக் பால் கொடுக்கிறேன் என்றபடி அதற்கும் தனி கம்பார்ட்மென்ட்டை காட்டினார்.
இறுதியாக, மாதத்திற்கு ஒருமுறையாவது ஃபிரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு, முழுமையாக க்ளீன் செய்யவேண்டும். முக்கியமாக ஸ்டெபிலைஸர் பயன்படுத்துங்கள் என்கிற குறிப்போடு இந்த ஃப்ரிட்ஜ் டூரை நிறைவு செய்தனர் அம்மாவும் மகளும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil