பிக் பாஸ் என்ட்ரீ…லவ் மேரேஜ்… இப்ப அன்பான அப்பா.. டேனியின் ஸ்வீட் மொமண்ட்ஸ்!

டேனி - டெனிஷா தம்பதிக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துக்கள்

By: Updated: August 18, 2020, 03:05:34 PM

bigg boss daniel wife bigg boss daniel : ஃப்ரெண்டு… லவ் மேட்டரு… ஃபீல் ஆகிட்டாப்ள… ‘ என்ற வைரல் வசனத்தின்மூலம் பிரபலமானவர், நடிகர் டேனியல். இவர், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் போட்டியாளராக இருந்தார். பிக் பாஸ் வீட்டில் பலதடவை இவர் தன் காதல் கதையைப் பகிர்ந்துள்ளார்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்தவர் டேனியல் அன்னி போப் என்கிற டேனி. இந்த படத்தில் அவர் ரொம்ப சுமார் மூஞ்சி குமார் என்ற ரோலில் மிகவும் காமெடியாக நடித்திருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் இரகசியமாக தனது காதலியை திருமணம் செய்து கொண்டது பற்றி செய்தி வெளியான பிறகுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அவர்கள் மிக எளிமையாக ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக் கூறினர்.

“கடவுளிடமிருந்து எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ஒரு கிப்ட் கிடைத்திருக்கிறது, ஒரு குட்டி ஆண் குழந்தை. அவனை உங்கள் பிரார்த்தனையில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவனை ஆசிர்வதியுங்கள் என குறிப்பிட்டிருந்தார். தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் சினிமா சூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வரும் டேனி தனது குடும்பத்தின் புதுவரவான மகனுடன் நேரத்தை தற்போது செலவிட்டு வருகிறார்.

அண்மையில் கொரோனா ஊரடங்கின் போது டேனியல் சர்ச்சையில் சிக்கினார். அதுக்குறித்து வீடியோ பேட்டியை டேனியல் அளித்திருந்தார். காதல் திருமணம், செல்ல மகன் என டேனியல் வாழ்க்கை பயங்கர ஸ்வீட்டாக சென்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss daniel wife bigg boss daniel wife baby shower bigg boss daniel baby

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X