Advertisment

துர்நாற்றம் வீசும் முடி, தேங்காய் நார் முடி.. அனிதா சம்பத்தின் சூப்பர் தீர்வுகள்!

Bigg Boss fame Anitha Sampath Beauty Tips Latest Video Tamil News நன்கு கலந்து முடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, முடியை அலசலாம். ஷாம்பூ உபயோகித்து அலசலாம்.

author-image
WebDesk
New Update
Bigg Boss fame Anitha Sampath Beauty Tips Latest Video Tamil News

Bigg Boss fame Anitha Sampath Beauty Tips Latest Video Tamil News

Bigg Boss fame Anitha Sampath Beauty Tips Latest Video Tamil News : முடி சம்பந்தமான வீடியோக்களை ஏற்கெனவே தன்னுடைய சேனலில் ஏராளமாக அப்லோட் செய்திருந்தாலும், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் ஹேர் பேக் என்கிற விஷயம் அவசியமானது என்பதை வலியுறுத்தும் காணொளி ஒன்றை சமீபத்தில் அப்லோட் செய்திருக்கிறார் அனிதா சம்பத். ஏராளமான Vlog வீடியோக்களை பதிவேற்றி வந்தாலும், இவருடைய அழகுக் குறிப்புகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில் அனிதாவின் இந்த ஹேர் பேக் வீடியோவில் அவர் பகிர்ந்துகொண்டவற்றைப் பார்க்கலாமா...

Advertisment

"இந்த ஹேர் பேக் போட்டால், நிச்சயம் உங்கள் முடிக்குத் தேவையான வெளியிலிருந்து கிடைக்கக்கூடிய நியூட்ரியன்ட்ஸ் கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களை வைத்து மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த ஹேர் பேக் பற்றித்தான் இன்று பார்க்கப்போகிறோம்" என்றபடி இந்த வீடியோ  ஆரம்பமாகிறது.

"முதலாவதாக நான் சொல்லப்போகிற பேக், தலை அடிக்கடி வியர்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கானது. அதிகப்படியான வியர்வையினால் துர்நாற்றம்கூட சிலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களுக்கான சரியான தீர்வு நெல்லிக்காய்தான். 4 நெல்லிக்காயை சிறிதளவு நறுக்கி, அதனை நன்கு வெய்யிலில் காயவைத்து, பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும். பிறகு, அதனோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேக் செய்து, அதனைத் தலையில் தேய்த்துக்கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் நன்கு ஊறிய பிறகு முடியை அலசுங்கள். ஷாம்பூ சிறிதளவு போட்டுக் கழுவலாம். இவ்வாறு செய்தால், நிச்சயம் தலையில் ஏற்படும் துர்நாற்றம் மறையும். எலுமிச்சை போன்ற எந்தவித எக்ஸ்ட்ரா பொருளும் சேர்க்காமல், வெறும் நெல்லிக்காயை மட்டும் பயன்படுத்தும்போது அதன் சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

அடுத்ததாக, தேங்காய் நார் போன்று சிலருக்கு சுருண்டு, வறண்டு முடி இருக்கும். அவர்களுக்கான தீர்வு, தேங்காய் பால். சுத்தமான தேங்காய் பால் எடுத்து, அதில் காட்டன் பந்துகளை நனைத்து தலையில் மென்மையாகத் தேய்க்கவேண்டும். தலை முழுவதும் பாலை வைத்துத் தேய்த்த பிறகு, அதனை அப்படியே விட்டுவிடக்கூடாது. அதன்மேல், ஆங்காங்கே சிறிய துளையிட்ட பாலிதீன் கவரை போட்டு தலையைக் கவர் செய்யவேண்டும். 20 நிமிடங்கள் பிறகு, முடியை அலசலாம்.

அடுத்தது, அதிகப்படியான உடல் வெப்பத்தினால் முடியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வு. இதற்கு வெந்தயம் சரியான மருந்து. முந்தைய நாள் இரவே தேவையான அளவு வெந்தயத்தை ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலை அதனை அரைத்து, அவற்றோடு சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை பிழிந்து, நன்கு கலந்து முடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, முடியை அலசலாம். ஷாம்பூ உபயோகித்து அலசலாம்.

அடுத்தது, கற்றாழை சிறிதளவு எடுத்து அதனை மிக்சியில் நன்கு அடித்து, தலைமுடியில் தேய்த்துக் குளித்தால், நிச்சயம் வேற லெவல் ரிசல்ட் கிடைக்கும். இது எந்த விதமான முடி இருப்பவர்களும் முயற்சி செய்து பார்க்கலாம். அதேபோல, ஷாம்பூ தேய்த்துக் குளித்த பிறகு அரிசி கழுவிய நீரை எடுத்து முடியை அலசிவிட்டு, 20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவினால், தலைமுடி மிகவும் வலுவாக வளரும்" என்றபடி இந்த உபயோகமான காணொளியை நிறைவு செய்தார் அனிதா சம்பத்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Anita Sampath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment