scorecardresearch

நான் டயட் பின்பற்றுவதற்கு இதுதான் காரணம் – பிக் பாஸ் அனிதா சம்பத் வைரல் வீடியோ!

Bigg Boss fame Anitha Sampath Diet Viral Video 3 வேளை சாப்பிடாமல், 6 வேளையாகப் பிரித்து கம்மி கம்மியாக சாப்பிடுகிறேன்.

Bigg Boss fame Anitha Sampath Diet Viral Video
Bigg Boss fame Anitha Sampath Diet Viral Video

Bigg Boss fame Anitha Sampath Diet Viral Video : வாராவாரம் விதவிதமான வீடியோக்களை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவு செய்து வரும் பிக் பாஸ் அனிதா சம்பத், சமீபத்தில் தன்னுடைய டயட் வீடியோவை பதிவேற்றியுள்ளார். ‘என்னது அனிதா டயட் இருக்கிறாரா’ என்றபடி பலரும் அந்தக் காணொளியை பார்த்து கமென்ட் செய்து வருகின்றனர். அவர் எதனால் டயட் பின்பற்றுகிறார் என்பதற்கான காரணத்தையும், ஆரோக்கியம் சார்ந்த பல விஷயங்களையும் இந்த காணொளியில் பகிர்ந்திருக்கிறார்.

“நிறைய பேர் என்னிடம் ஏதாவது டயட் பின்பற்றுகிறீர்களா என்று கேட்டீர்கள். என் வாழ்நாளில் இதுவரை அப்படி எல்லாம் பின்பற்றியதில்லை. ஆனால், சமீப காலமாக ஒரு சில மாற்றங்களை செய்து, எனக்கான டயட்டை நான் பின்பற்றி வருகிறேன். அதற்கான விடியோதான் இது. நான் எதனால் இதைப் பின்பற்றுகிறேன் என்பதையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்” என்றபடி காணொளியைத் தொடங்கினார் அனிதா சம்பத்.

“காலை எழுந்ததும் தனியாவைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடிப்பேன். இது உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. பிறகு பிரேக்ஃபாஸ்ட். முன்பு தோசை, இட்லி போன்றவற்றைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், டயட் ஆரம்பித்தவுடன் அது மாறிவிட்டது. அந்த வரிசையில் முதலில், ஊறவைத்த நட்ஸ், விதைகள், டேட்ஸ், பீனட் பட்டர் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, ஸ்மூதி செய்து குடிக்கிறேன். எப்போதுமே நட்ஸ் போன்றவற்றை ஊறவிக்கும்போது அதன் தண்ணீரை எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்மூதியுடன் ஒரு முட்டை எடுத்துக்கொள்வேன். இதுதான் என்னுடைய தற்போதைய காலை உணவு. என்னுடைய ஊட்டச்சத்து நிபுணர் பால் இல்லாமல் டயட் பின்பற்றுங்கள் என்று சொன்னதால், பிளாக் டீ குடிக்க ஆரம்பித்துவிட்டேன். இதற்குப் பிறகு, ப்ரன்ச் சாப்பிடுகிறேன். அதற்காக கிர்ணி பழம் சாப்பிடுகிறேன். 3 வேளை சாப்பிடாமல், 6 வேளையாகப் பிரித்து கம்மி கம்மியாக சாப்பிடுகிறேன்.

அடுத்தது மதிய உணவிற்கு 100 கிராம் அளவில்தான் சாப்பாடு சாப்பிட சொல்லிருக்கிறார். அதனால், அதற்கேற்றபடி இன்று சுரைக்காய் கொள்ளு குழம்பு சாதம், கீரை. இந்த டயட் ஆரம்பித்தவுடன், எடை மெஷின் வாங்கிவிட்டோம். அதனால் இதில் அளந்துதான் எல்லாவற்றையும் சாப்பிடுகிறோம். சாதம் 100 கிராம் என்றால் குழம்பும் 100 கிராம் சாப்பிடவேண்டும்.

அதற்கடுத்து வெள்ளரி மற்றும் கேரட் சாலட். மாலை வேளையில் மீண்டும் பிளாக் டீ. அடுத்தது டின்னர். தோசை மற்றும் சட்னி. டின்னருக்கு அடுத்தபடியாக தூங்குவதற்கு முன்பு, மிதமான சுடுதண்ணீரில் இஞ்சியைத் தட்டி போட்டுக் குடிப்பேன். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். இந்த டயட் என்னுடைய உடலமைப்பிற்கு ஏற்றபடி என்னுடைய ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்தது. என்னுடைய மாதவிடாய் சீராக அமையவேண்டும் என்பதற்காகவும் சருமம் சீராக வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த டயட். மேலும், எல்லா நாளும் இதே உணவுகள் கிடையாது. ஒவ்வொரு நாளும் வேறுபடும். உங்களுக்கேற்ற உணவு முறையை நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும்” என்ற குறிப்போடு இந்தக் காணொளியை நிறைவு செய்தார் அனிதா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss fame anitha sampath diet viral video