7 வருட ஜாம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 1 கோடி வியூஸ் – அறந்தாங்கி நிஷா ஃப்ரிட்ஜ் டூர்!

Bigg Boss fame Nisha Fridge Tour Viral Video Tamil News உபயோகித்தால் தீர்ந்துவிடும் என்று 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத ஃபேஸ் மாஸ்க் இருந்தது.

Bigg Boss fame Nisha Fridge Tour Viral Video Tamil News
Bigg Boss fame Nisha Fridge Tour Viral Video Tamil News

Bigg Boss fame Nisha Fridge Tour Viral Video Tamil News : எப்போதும் படபடவென பேசி பொரித்து தள்ளும் அறந்தாங்கி நிஷா, தனக்கென தனிப்பட்ட வகையில் ‘கருப்பு ரோஜா’ எனும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடர்ந்து, அதில் ஏராளமான கன்டென்ட்டுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் அவர் அப்லோட் செய்த ஃப்ரிட்ஜ் டூர் வீடியோ, 1 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது அந்த வீடியோவில்?

விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் பங்குபெற்று வெற்றிபெற்ற ஹயர் ஃப்ரிட்ஜ் அது. அதனாலேயே மிகவும் பாத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதாக டிஸ்க்ளைமர் போட்டபடி, தன் கணவரையும் இந்த டூருக்கு அழைத்தார். ஃபிரிஜ்ஜில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம் என்று நிஷா கேட்டு முடிப்பதற்குள், அவசர அவசரமாக நிஷாவின் கணவர் மாஸ்க்கை அணிந்தார்.

அதற்கேற்ற கவுன்ட்டரை போட்டபடி, ஃபிரிட்ஜை திறந்தால் அவ்வளவு நாற்றம். இருவரின் முக பாவனைகள் சொல்கிறது, அந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எவ்வளவு வாடை வீசுகிறதென்று! இது நிச்சயம் ஃப்ரிட்ஜ் டூர் அல்ல ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்யும் டூர் என்றபடி காணொளி தொடர்கிறது.

10 நாளுக்கு முன்பு அரைத்து வைத்த சட்னி, தீர்ந்துபோன இஞ்சி பூண்டு விழுது பாக்ஸ், போன வ்ருட தீபாவளிக்குச் செய்த ரவா லட்டு என உள்ளே இருக்கும் பொருள்களில் பாதிக்கும் மேல் கெட்டுப்போனவைதான். திடீரென்று தன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்த நிஷாவின் கணவருக்கு ஷாக். காரணம் கேட்டதற்கு, தன் கணவர் கெட்டுப்போய்விடக் கூடாதென்று அந்தப் புகைப்படத்தை உள்ளே வைத்திருக்கிறாராம். உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது மக்களே!

பிறகு பூஸ்ட் பாட்டிலில் மல்லி விதைகள் அதனைத் தொடர்ந்த டப்பாக்கள் முழுவதிலும் வீணாகி நாற்றம் வீசும் உணவுப் பொருள்கள்தான். நல்ல வேலையாக அவற்றை நமக்கு அவற்றை காட்டவில்லை. காய்ந்த எலுமிச்சை, 7 வருடத்துக்கு முன்பு வாங்கிய ஜாம், உபயோகித்தால் தீர்ந்துவிடும் என்று 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத ஃபேஸ் மாஸ்க் என மினி குப்பைத்தொட்டிதான் உள்ளே இருந்தது. இந்த காணொளி மூல அவற்றைச் சுத்தம் செய்தனர்.

“மற்ற வீடுகளில் இருப்பதைப்போலத்தான் எங்கள் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் இருக்கிறது.  ஆனால், மற்றவர்கள் வீட்டில் கொஞ்சம் சுத்தமாக வைத்திருப்பார்கள். எங்கள் வீட்டில் கொடூரமாக இருக்கிறது. என்ன செய்வது. இருவரும் வேலைக்குப் போகிறோம் அல்லவா?” என்றுகூறியபடி காணொளியை நிறைவு செய்கிறார் நிஷா!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss fame nisha fridge tour viral video tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com