scorecardresearch

கல்லூரி விழாவில் பிக் பாஸ் பாவனி: அமீருடன் திருமணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பிறகு மாணவிகள், திருமணத்தைப் பற்றி கேட்கும் போது, அதற்கு பாவனி’ நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன், என்னுடைய வீட்டில் பொருத்தமான மாப்பிள்ளையை தேடுகிறார்கள் என்று கூறினார்.

Amir Pavni
Bigg boss fame Pavni reddy opens up about marriage with Amir

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் சிறப்பாக முடிந்தது. இதில் ராஜூ ஜெயமோகன் அதிக வாக்குகளை பெற்று, வெற்றி வாகை சூடினார். அவருக்கு கோப்பையுடன் ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்தார். பாவனிக்கு 3-வது இடம் கிடைத்தது.

இதில், வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த பிரபல நடன இயக்குனர் அமீர்’ டிக்கெட் டு ஃபைனாலி டாஸ்கை வென்று’ நிகழ்ச்சியின் இறுதிவரை வந்துவிட்டார்.

 வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர், பாவனியுடன் செய்யும் குரும்புகள் இணையத்தில் டிரெண்ட் ஆகியது. இது பாவனியின் ரசிகர்களை எரிச்சல்படுத்தினாலும், ஒரு சில ரசிகர்கள் வாழ்க்கையில் பெரிய கஷ்டங்களை அனுபவித்த இவர்கள் இருவரும்’ நிஜமாகவே ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்குமென கூறி வந்தனர்.

ஆனால் பாவனி வீட்டிலிருக்கும் போது’ வெளியே வந்த பிறகும், தான் இன்னொரு திருமணம் செய்ய போவதில்லை என்பதை உறுதியாக மறுத்து விட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தத பிறகு,  அமீரும், பாவனியும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர். பிறகு இருவரும் சேர்ந்து, ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவும் தீயாக வைரலாகியது.

இந்நிலையில்’ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், பாவனி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல் நாள் முதல் இறுதி வரை மற்ற போட்டியாளர்களால் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு வாக்களித்தவர்கள் ஒவ்வொரு முறையும் தன்னை காப்பாற்றியதாகவும் கூறி பாவனி’ தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வரும் அனைத்து விமர்சனங்களையும் புறக்கணித்து, பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்கள் திருமணம் செய்துகொண்டாலும், கணவர்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது, சுதந்திரமாக இருக்க வேண்டும், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பாவனி அறிவுரை வழங்கினார்.

பிறகு அங்குள்ள மாணவிகள், திருமணத்தைப் பற்றி கேட்கும் போது, அதற்கு பாவனி’ நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன், என்னுடைய வீட்டில் பொருத்தமான மாப்பிள்ளையை தேடுகிறார்கள் என்று கூறினார். உடனே மாணவிகள் கூட்டமாக’ “அமீர்” என்று கோஷமிடத் தொடங்கினர், அதற்கு பாவனி சிரித்தபடியே’ நட்பைத் தவிர தங்களுக்குள் எதுவும் இல்லை, அப்படி ஏதாவது நடந்தால், நானே சொல்லுவேன் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss fame pavni reddy opens up about marriage with amir