bigg boss ganesh wife : வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியாதவர்களே இல்லை எனலாம்.
கணேஷ் வெங்கட்ராமன் தமிழில் அபியும் நானும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்பு, உன்னைப்போல் ஒருவர், தனி ஒருவர், இவன் வேற மாதிரி என பல படங்களில் நடித்திருக்கார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கணேஷ் கலந்துக் கொண்டார். அதுவரை கணேஷை வெறும் நடிகராக மட்டுமே தெரிந்துக் கொண்டவர்களுக்கு அவரின் ஒழுக்கம் பற்றி தெரிய வந்தது. பெண்களிடம் கன்னியமாக நடந்துக் கொண்டதும், உடலை பேணி காப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் பலரையும் கவ்ர்ந்திருந்தது.
இவரின் மனைவி நிஷா. விஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். இவன் வேற மாதிரி, நான் சிகப்பு மனிதன் உட்பட சில தமிழ் படங்களிலும் நிஷா நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று விலகி விட்டார். அந்த நேரத்தில் தான் நிஷா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த தம்பதியரின் திருமணம் காதல் திருமணம் ஆகும்.இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் நிஷா டிவி சானல் மற்றும் சீரியலிருந்து சில நாட்கள் ஓய்வு பெற்றுள்ளார்.
தற்போது லாக்டவுனில் இருக்கும் கணேஷ் தனது செல்ல மகளுடன் விளையாடு அவருடம் நேரத்தை செலவிடுவது என பொழுதை கழித்து வருகிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது பற்றியும் கணேஷ் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”