விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7, அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது.
இதில் இலக்கியவாதி பவா செல்லத்துரை, விஜய் வர்மா, ரவீனா தாஹா, வினுஷா தேவி, மணி சந்திரா, கூல் சுரேஷ், பூர்ணிமா, வனிதா மகள் ஜோவிகா என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது பிபி வீட்டில் இளம் போட்டியாளராக இருக்கும் ஜோவிகா, தன்னுடைய எண்ட்ரீ வீடியோவில், ‘எனக்கு படிப்பு சரியா வரல, அம்மா நிறைய ஸ்கூல்ல மாத்திப் பார்த்தாங்க, எதுவும் வொர்க் அவுட் ஆகல. நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல ஆனேன்.. இதெல்லாம் பார்த்த அம்மா, சரி உனக்கு படிப்பு வரல. அப்போ உனக்கு என்ன ஆசைன்னு கேட்டாங்க. எனக்கு ஆக்டர் ஆகணும் ஆசை.. அதை நான் அம்மாகிட்ட சொன்னேன், அப்புறம் தான் அதுக்கான ரூட்ல டிராவல் பண்ண ஸ்டார்ட் பண்ணேன்’.. என்று கூறியிருந்தார்..
பிக்பாஸ் வீட்டுக்குள், சிலர் தங்கள் வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஜோவிகா படிப்பை பாதியிலேயே நிறுத்தியது குறித்து யுகேந்திரனும், விசித்திராவும் ஒருவரின் வாழ்க்கையில் டிகிரி எவ்வளவு முக்கியம், என்று சொல்லி ஜோவிகாவை மீண்டும் படிக்க அறிவுரை கூறினர்..
அதற்கு, ஜோவிகா நான் படிப்பேன், ஆனா எனக்கு பிடிச்ச culinary studies, என்று கூறிவிட்டு இனி இந்த டாப்பிக் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டார்…
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த சண்டை பிபி வீட்டில் ஆரம்பமாகி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், விசித்திராவுக்கும், ஜோவிகாவும் எதிர்பாராத விதமாக வந்த வாக்குவாதம் பெரிய சண்டையில் முடிந்தது.
படிப்பு ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்று விசித்திரா கூற, அதற்கு எதிராக தனக்கு படிப்பு வரவில்லை, அதனால் தான் நான் நிறுத்தினேன். இந்த படிப்பால் நிறைய குழந்தைகள் தற்கொலை செய்கின்றனர்,. என்னால் முடியவில்லை என்றதால்தான் படிப்பை விட்டேன். ஒரு விசயத்தைச் செய்யும்போது கவனமில்லை என்றால் அதை விட்டுவிட வேண்டும். படித்திருந்தால் மட்டுமே வாழ வேண்டும் என எதுவுமில்லை என்று கத்தினார்..
இதில் விசித்திரா, ஜோவிகா இருவர் பேசியதிலும் அவரவர் தரப்பு நியாயங்கள் இருந்தது. இந்த சண்டையில் விசித்திரா மிகவும் மனமுடைந்து போனார்..
இதனால் இப்போது பிபி ரசிகர்கள், ஜோவிகா படிப்பு பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்…
9ஆம் வகுப்பு வரை படித்த ஜோவிகா, அதன் பிறகு நடிப்பில் டிப்ளமோ முடித்துள்ளார். பிறகு அம்மாவின் பிஸ்னெஸை கவனித்துக் கொண்டிருந்த அவர், இப்போது இயக்குனர் பாத்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“