பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பங்கேற்று தமிழ் பேசும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை லாஸ்லியா. இலங்கை தமிழரான லாஸ்லியா தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கையில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பிரபலமான லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் போட்டியாளராகப் பங்கேற்று தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, லாஸ்லியாவுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா தொற்று பரவல் இல்லாமல் இருந்திருந்தால், லாஸ்லியா மேலும் பல படங்களில் நடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது, சற்று பப்ளியாக பூசியது போல இருந்த இருந்த லாஸ்லியா இப்போது, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் ஒல்லியாக க்யூட்டாக மாறியிருக்கிறார். இயக்குநர் அருண் இயக்கத்தில், நடிகர் ஹரி பாஸ்கர் உடன் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் லாஸ்லியாவைப் பார்த்த பலரும், கேட்பது நீங்கள் எப்படி ‘வெயிட் லாஸ்’ செய்தீர்கள் என்பதுதான். லாஸ்லியா எப்படி எடை கூடியது, எப்படி தனது எடையைக் குறைத்தார், எத்தனை கிலோவில் இருந்து எத்தனை கிலோவுக்கு உடல் எடையைக் குறைத்தார் என்பதைக் கூறியுள்ளார்.
நடிகை லாஸ்லியா 25 கிலோ எடை குறைத்ததாகத் தெரிவித்துள்ளார். மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லாஸ்லியா கூறுகையில், நான் முதலில் இலங்கையில் இருக்கும்போது, ரொம்ப வருஷமாக 50 கிலோ எடைதான் இருந்தேன். பிறகு, வீட்டில் சமைக்க நேரம் இல்லாததால், வெளியில் சாப்பிட்டதால் தனது உடல் எடை 75 கிலோ ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். அதனால், உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்த லாஸ்லியா உணவுக் கட்டுப்பாடு மூலம் 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
அதற்கு பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வந்தபோது, 60 கிலோ எடை இருந்தார் என்றும் தமிழ்நாடு வந்தபோது சென்னையில் இலங்கையைச் சேர்ந்த உறவினர் வீட்டில் தங்கியதாகவும் அங்கே அவருக்கு இலங்கை உணவுகளை சமைத்து கொடுக்கப்பட்டதகாவும் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, 60-63 கிலோ எடையில் இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் வீட்டில் காலையில் வெண் பொங்கல் என்பது சாப்பிட்டு பழக்கமில்லை. அதனால், தயிரில் சர்க்கரை போட்டு சாப்பிடுவேன், காலையில் கேக் வரும் அதை சாப்பிடுவேன், இப்படி சாப்பிட்டதால் எடை கூடிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் 75 கிலோ எடை கூடிவிட்டது. முகத்தில் பருக்கள் வந்துவிட்டது. உடல்நலப் பிரச்னையும் வந்துவிட்டது. மருத்துவர் நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர், எடையைக் குறைக்க முடிவு செய்து உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடல் எடையை 25 கிலோ வரை குறைத்துள்ளதாக லாஸ்லியா கூறியுள்ளார். சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்துவிட்டேன் என்றும் உணவில் அதிகமான புரோட்டின், அதிகமான ஃபைபர், மிகவும் குறைவாக கார்போ ஹைட்ரேட் எடுத்துக்கொண்டேன், உடற்பயிற்சி செய்தேன், எனது ஜிம் கோச் சில யோசனைகளைக் கூறினார். இப்படி 25 கிலோ எடை குறைத்ததாக லாஸ்லியா கூறினார். சமீப காலமாக, இரவில் உணவு சாப்பிடுவதே இல்லை என்றும் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.
மேலும், முகப்பரு சரியாவதற்கு மருத்துவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கூறினர். மருத்துவரிடம் சென்று ஸ்கின்னைக் காட்டினேன். அவர்கள் முகப்பரும் போக வழிகளைக் கூறினர், உங்களுக்கும் இந்த பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் சென்று காட்டுங்கள் என்று லாஸ்லியா கூறியுள்ளார்.