bigg boss meera mitun instagram : மீரா மிதுன்.. நடிகை.. மாடல்.. பிக் பாஸ் பிரபல என இவர் குறித்த அறிமுகமே தேவையில்லை. பிக்பாஸ் 3-ல் பங்கேற்றவர்களில் வீட்டுக்குள் மீரா ஏற்படுத்திய சர்ச்சைகள் ஏராளம். அதற்கு முன்பு, மிஸ் தென்னிந்தியா அழகிப் போட்டியில் கலந்துக் கொண்டு, திருமணமான விஷயத்தை மறைத்து, டைட்டில் வென்று விட்டதாகக் கூறி, அந்த டைட்டிலை மீரா மிதுனிடமிருந்து திரும்பப்பெற்றது அழகிப் போட்டியை நடத்தியக் குழு.
Advertisment
இதுப்போன்ற பல சர்ச்சைகள் மீரா மீது வைக்கப்பட்டாலும் அவர் எல்லாவற்றிற்கும் உரிய விளக்கம் அளித்து விடுவார். , பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாகக் கூறி, ஈவெண்ட் மேனேஜர் ஜோய் மைக்கேல் என்பவர் மீராவுக்கு எதிராக களத்தில் இறங்கி இருந்தார்.
5 வாரங்கள் மட்டுமே மீரா பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தாலும், அவர் நிகழ்ச்சியில் இருக்கும் போதும், வெளியே வந்த பிறகும், அவரைப் பற்றி வெளியான வீடியோக்களும், அதற்கு பதிலளிக்க அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் மூலமாகவும் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே சென்றது இன்று வரை செல்கிறது.
Advertisment
Advertisements
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் மீரா நடித்திருக்கிறார். பிக் பாஸில் இயக்குனர் சேரன் மீது மீரா முன் வைத்த குற்றச்சாட்டு சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதுக் குறித்து வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு மீரா வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார்.
அதே போல், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நவம்பர் 1 நிகழ்ச்சியும் மீராவால் மறக்க முடியாத ஒன்று.அவர் அந்த நடன போட்டியில் ஆசிப் என்பவருடன் கலந்துக் கொண்டார். இருவ்ருக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழும்ப ஆசிப் அந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். அப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவராக நடிகை பங்கேற்றிருந்தார்.
மீரா குறித்த வீடியோக்கள் அதிகளவில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் பலரும் தேடியது அந்த ஜோடி.நம்பர் 1 வீடியோவை தான். இதுக்குறித்து மீரா ஒருமுறை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த வீடியோவில், “ ஜோடி நம்பர் 1-ல் ஆசிப் என்பவர் என்னை தவறாக கையாண்டார். சங்கீதா மேம் பேசியதை வைத்து விஜய் டிவி ப்ரோமோ போட்டார்கள். உண்மை என்னவென்று, ஹாட் ஸ்டாரில் பாருங்கள். சேரன் சாரைப் பற்றி பேசுகையில், அவரை எல்லாரும் புனிதமானவராகப் பார்க்கிறார்கள்.
நான் பொண்ணுங்கள ரொம்ப மதிக்கிறவன், டி.ராஜேந்தர் படத்துல வர்ற மாதிரின்னு சொன்னாங்க. ஆனா அங்க இருக்க எல்லா பொண்ணுங்களையும் கட்டிப் புடிச்சாரு. அங்க இருக்க எல்லாரும், சேரன் பெரிய டைரக்டரு. அவர பகைச்சுக்கக் கூடாது. நமக்கு வாய்ப்பு தருவாருன்னு, அவருக்கு ஐஸ் வச்சு, ஜால்ரா தட்டுனாங்க” என்று தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil