Bigg Boss Oviya Beauty Secrets Tamil News : 'களவாணி', 'மெரினா', 'கலகலப்பு' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை தமிழ் திரையுலகில் முதல் முதலில் ஆர்மி அமைத்தது ஓவியாவிற்குதான். அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் ஓவியா தன்னுடைய எளிமையான ஸ்கின்கேர் ரொட்டினை பகிர்ந்தது மட்டுமில்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிய தன் பார்வையையும் பகிர்ந்துகொண்டார்.
"எனக்கு ரொட்டின் என்றெல்லாம் பெரிதாக எதுவுமில்லை. காலையில் எழுந்ததும் ஏதாவதொரு ஆர்கானிக் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவுவேன். வெளியே செல்லும்போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவேன். அவ்வளவுதான். இவை இல்லாமல் இயற்கையான ப்ளீச்சிற்கு, எலுமிச்சை மற்றும் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்வேன். அதேபோல தயிர் கூட அப்ளை பண்ணுவேன். இவ்வளவுதான் என் சருமத்திற்காக நான் செய்யும் பராமரிப்பு வழிமுறைகள்.
தலைமுடியை பொறுத்தவரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் முக்கியம். சென்னை வந்தபிறகு தலைமுடியை சரியாகப் பராமரிக்க முடியவில்லை. ஏகப்பட்ட கலர்ஸ், ஹீட்டர் பயன்படுத்துவதால், அதிகமாகத் தலைமுடியை அலசுவதில்லை. வாரத்திற்கு இரண்டு நாள் மட்டும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளித்துப் பராமரித்து வருகிறேன்.
எந்த ஒரு பியூட்டி பொருளையும் நான் நம்ப மாட்டேன். என்னை பொறுத்தவரை இயற்கையாக இருப்பதுதான் அழகு. இந்த க்ரீமை பயன்படுத்தினால் சருமம் பொலிவாகும், வெள்ளை ஆகும் என்று சொல்வதை நம்புவதை முதலில் அனைவரும் கைவிடவேண்டும். அதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தான். என்னுடைய ஒரிஜினாலிட்டியை மனதளவிலும் உருவத்திலும் மாற்றியமைக்கப் பிடிக்காது.
சிலர் அழகாக வேண்டும் என்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்கள். அதெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. பெர்ஃபெக்ஷன் என்பது நம் மனதில்தான் உள்ளது. எண்ணெய் பொறுத்த வரையில் நான் பெர்ஃபெக்ட்டாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதுவே எனக்கு போதும். பியூட்டி பெர்ஃபெக்ஷன் மீது எந்த ஒபினியனும் எனக்கு இல்லை".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.