மறக்கமுடியாத ப்ரோபோசல், சங்கடமான தருணம், டாட்டூ - ரம்யா பாண்டியன் ஷேரிங்ஸ்!

Bigg Boss Ramya Pandian Unforgettable Moments Tamil News கதாபாத்திரம் செட் ஆகிவிட்டதென்று என்னுடைய இயக்குநருக்கு மகிழ்ச்சி

Bigg Boss Ramya Pandian Unforgettable Moments Tamil News கதாபாத்திரம் செட் ஆகிவிட்டதென்று என்னுடைய இயக்குநருக்கு மகிழ்ச்சி

author-image
WebDesk
New Update
Bigg Boss Ramya Pandian Unforgettable Moments Tamil News

Bigg Boss Ramya Pandian Unforgettable Moments Tamil News

Bigg Boss Ramya Pandian Unforgettable Moments Tamil News : ஒரேயொரு போட்டோஷூட், டோட்டல் தமிழ்நாடு க்ளோஸ் என்றதுமே எல்லோருடைய நினைவுக்கு வருபவர் ரம்யா பாண்டியன்தான். ஏற்கெனவே, ஜோக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அவருடைய புடவை போட்டோஷூட்தான் புகழைத் தேடித்தந்தது. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வாய்ப்பு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சில சின்னத்திரை நிகழ்ச்சிகளின் நடுவர் என டிவி பெட்டிக்குள்ளேயே சுற்றித் திரிந்தவர் சமீபத்தில் தான் நடித்த 'ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்' பட ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாகி உள்ளார்.  இந்நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவாரசிய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார் ரம்யா.

Advertisment
publive-image

"என்னுடைய  முதன்மை இலக்கு படங்கள்தான். ஆனால், லாக்டவுனில் திரைப்பட ஷூட்டிங் எதுவும் பெரிதாக இல்லை என்பதால் பிக் பாஸ் உள்ளிட்ட சின்னதிரை வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். இப்போது மீண்டும் வெள்ளித்திரைக்குச் சென்றிருக்கிறேன். என்னை எப்போதுமே நடிகையாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள்" என்று தொடங்கியவர் தன் வாழ்வில் தனக்கு வந்த மறக்கமுடியாத காதல் ப்ரோபோசல் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

publive-image

"நான் காலேஜ் படிக்கும்போது 21ஜி பேருந்தில்தான் போவேன். அப்போது மூன்று வருடங்களாக என்னை ஒருத்தர் பின்தொடர்ந்துகொண்டு இருந்தார். நான் எங்கு ஏறுவேனோ, அங்கேயே அவர் காத்திருப்பார். வெவ்வேறு நேரத்தில் சென்றாலும், அந்த நபர் அங்கு இருப்பார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் ப்ரொபோஸ் பண்ணினார். ஆனால், இப்படியெல்லாம் பண்ணாதீங்க என்றபடி பயத்திலேயே சொல்லிவிட்டு சென்றேன். அந்த ப்ரோபோசல் என்னால் மறக்கவே முடியாது" என்றபடி தன் வாழ்வில் நடந்த சங்கடமான நிகழ்வு பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

publive-image

"சமீபத்திய படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிற்காக ஒரு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு கேரவன் எல்லாம் இல்லை. ஒரு குடிசை வீட்டில்தான் ஷூட் செய்தோம். அப்போது, எதிர்வீட்டில் கழிவறை பயன்படுத்தலாமா என்று கேட்டுவிட்டுச் சென்றோம். பிறகு, மேக்-அப் எல்லாம் போட்டுவிட்டு ஷூட் முடியும் தருணத்தில் மீண்டும் ரெஸ்ட்ரூம் பயன்படுத்தவேண்டுமென்று அந்த வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் என்னை விடவே இல்லை. கேட்-அப் மாற்றியதனால் அடையாளம் தெரியாமல் என்னவோ அவர்கள் விடவே இல்லை. இது மிகவும் சங்கடமான தருணமாக இருந்தது. ஆனால், கதாபாத்திரம் செட் ஆகிவிட்டதென்று என்னுடைய இயக்குநருக்கு மகிழ்ச்சி" என்று கூறினார். மேலும், தன் வாழ்வில் ரசிகரைக் கண்டு பூரித்துப்போன தருணம் பற்றி இறுதியாகப் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
Advertisements
publive-image

"ஒரு பெண், 'ரம்யா பாண்டியன் வெறும் பெயரல்ல அது உணர்வு' என்று டாட்டூ இட்டுக்கொண்டது என்னால் நிச்சயம் மறக்க முடியாது. டாட்டூ நம்முடனே தான் இருக்கும். அதை மாற்றவே முடியாது. ஆனால், ஒரு பெண் எனக்காக இதுபோன்று செய்தது மிகவும் வியப்பாக இருந்தது" என்றுகூறி பூரிக்கிறார் ரம்யா பாண்டியன்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ramya Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: