Bigg Boss Rekha Fridge Tour Youtube Viral Video Tamil News : ஜெனிஃபர் டீச்சராக தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ரேகா, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து மீனுக்குட்டியாக அறியப்பட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டென்ஷன் அம்மாவாக அறியப்பட்டாலும், அனைவருடனும் அன்பாகவே பழகி வருகிறார். சமீபத்தில் வேப்பிலை அம்மனாக அவதாரம் எடுத்தவர், தன்னுடைய யூடியூப் சேனலில் ஃப்ரிட்ஜ் டூர் காணொளியை அப்லோட் செய்து ஆயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளிச் சென்றிருக்கிறார்.

ரேகா அசைவப் பிரியை என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது ஃபிரிட்ஜை சுத்தம் செய்துவிடுவாராம். ஃப்ரிட்ஜ் டூர் ஆரம்பமே, அதன்மேல் ஒட்டப்பட்டிருந்த மேக்னட்ஸ் பற்றிய முன்னுரையோடு தொடங்கியது. பிறகு ஃபிரிட்ஜை திறந்து அதனுள் இருந்த பொருள்களையெல்லாம் மேலிருந்து கீழ் வரிசையாக விளக்கமளித்து வந்தார்.
அதில் தனக்கு மிகவும் பிடித்த ப்ரெடொடு சேர்த்து சாப்பிடும் வெண்ணெய் மற்றும் சீஸ் வகைகளை முதலில் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து குட்டீஸ்களோடு இணைந்து சாப்பிடும் சாக்லேட் வகைகளைக் காண்பித்தார். கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் என மிட்டாய் வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும் பப்பாளி, சார்கோல் ஃபேஷியல் மாஸ்க் பாக்கெட்டுகள் நிரம்பியிருந்தன. இவை எல்லாவற்றையும்விட, அந்தக் காலத்தில் நாயகிகள் பயன்படுத்திய பேன் கேக் மற்றும் சில மேக்-அப் பொருள்களை ஞாபகமாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறார்.

பிறகு செர்ரி, உலர்ந்த திராட்சை, சாஸ் வகைகள், ஆலிவ், மில்க் க்ரீம், எசன்ஸ், ஜாம், பிஸ்தா பால், கெட்ச் அப், எலுமிச்சை சர்க்கரை கலந்த சிரப், ரோஸ் வாட்டர் உள்ளிட்ட எல்லாவற்றையும் காட்டினார். அதன் பயன்பாடுகளைப் பற்றியும் குறிப்புகள் கொடுத்தார். பிறகு ஒரு கருத்துச் சொல்லப்போகிறேன் என்றுகூறி, “ஃப்ரிட்ஜ் டூரில் மேல் இருந்து கீழாக பார்த்தாச்சு. எப்போதும் கீழேயே இருக்க முடியாது. மேலே போயாகவேண்டும். அதனால், இப்போ மேலே போகலாம்” என்றபடி மேலும் தன் சுற்றுலாவைத் தொடர்ந்தார்.
பிறகு காய்கறி, பழங்கள் நிறைந்த ரேக், கொத்தமல்லி மிகவும் பிடிக்கும் என்பதால் டப்பா நிறைய மல்லித்தழைகள், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை உரித்து வைக்கப்படும் பூண்டு, வெங்காயம், பெரிய நெல்லிக்காய் என அனைத்தையும் காண்பித்தார். மேலும், மீன் குழம்பு ஆகியவற்றில் கூட பேரியல் நெல்லியைச் சேர்த்துச் செய்யலாம் என்கிற குறிப்பையும் கொடுத்தார்.
அடுத்ததாக ஃப்ரீசர் பக்க கூட்டிச் சென்றார். அதில், பாதாம், பிஸ்தா பாக்ஸ் இருந்தன. பிறகு, பதப்படுத்தப்பட்ட பட்டாணி, ஃப்ரைஸ், நக்கட்ஸ் ஆகியவை இருந்தன. பாசுமதி ரைஸ் பூச்சு பிடித்துவிடுகிறது என்பதால், அதையும் ஃப்ரீசரில் தள்ளிவிட்டார். மீனுக்குட்டிக்கு பாலில் பிஸ்கட் நனைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும் என்பதால் அதிக எண்ணிக்கையிலான பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைத்திருந்தார். அசைவ பிரியையான ரேகாவின் ஃப்ரீசர் நிறைய சிக்கன், மட்டன், மீன், லாப்ஸ்டர், மட்டன் கொத்துக்கறி, தலைக்கறி என அடுக்கி வைத்திருந்தார். இவற்றோடு இந்தக் காணொளி நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil