இதனால்தான் நான் எப்போதும் மேக்-அப் போடுகிறேன் – பிக் பாஸ் ரேஷ்மா பசுபுலேட்டி பியூட்டி சீக்ரெட்ஸ்!

Bigg Boss Reshma Pasupileti Beauty and Makeup Secrets நிறையப் பேர் கலாய்ப்பார்கள். பரவாயில்லை. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்

Bigg Boss Reshma Pasupileti Beauty and Makeup Secrets Tamil News
Bigg Boss Reshma Pasupileti Beauty and Makeup Secrets Tamil News

Bigg Boss Reshma Pasupileti Beauty and Makeup Secrets Tamil News : வெள்ளித்திரையின் ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தின் மூலம், அனைவர்க்கும் ‘புஷபாவாக’ அறிமுகமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. அதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும்பாலான மக்கள் ஆதரவை பெற்றார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ தொடர் மூலம் மக்களை தினந்திரும் சந்தித்து வருகிறார். மேக்-அப்பிற்கு பேர்போன ரேஷ்மா, தனக்கு ஏன் மேக்-அப் மீது அதிக ஈர்ப்பு வந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டார்.

காலையில் லைட் போடுவதற்கு முன்பே, மேக்-அப்பும் கையுமாக இருக்கும் ரேஷ்மாவை பார்த்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளராக இருந்த சாண்டி மாஸ்டர், ‘ரேஷ்மா, மேக்-அப் பூசுமா’ என்று கூறுவாராம்.  ரோஷாமாவிற்கு மேக்-அப் மீது ஆர்வம். இந்த அளவு கடந்த விருப்பத்தினால், ‘கேண்டி க்ரஷ்’ எனும் தன்னுடைய மேக்-அப் ப்ராண்டையும் அறிமுகம் செய்திருக்கிறார் இவர். தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே இவருடைய மேக்-அப் பொருள்கள் கிடைக்கின்றன.

ஒப்பனை செய்துகொள்வதில் அதிக விருப்பமுள்ள இவர், காலையில் லைட் மேக்-அப் மற்றும் மாலையில் ஹெவி மேக்-அப் போடுவது சிறந்தது என்கிற அட்வைஸை மற்ற மேக்-அப் பிரியர்களுக்கு வழங்கினார். அதேபோல பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, கான்டூரிங் செய்துகொள்வது அவசியம் என்கிறார்.

“முகத்தில் சற்று சதைப்பிடிப்பு இருப்பவர்கள் கன்னங்களிலும், நீண்ட நெற்றி உடையவர்கள் நெற்றி பகுதியிலும் கான்டூர் செய்யலாம். அதாவது, அதிகப்படியான இடங்களைக் குறைப்பதுதான் கான்டூரிங். எல்லோருமே அவரவர்கள் எண்ணத்தில் அழகுதான் என்றாலும், சிலர் தன்னம்பிக்கையாக உணரமாட்டார்கள். எல்லோருக்கும் க்ளியர் சருமம் கிடைப்பதில்லை. முகப்பரு, வடுக்கள் போன்றவை நிச்சயம் இருக்கும். இவை பல நேரங்களில் நம்முடைய தன்னம்பிக்கையை இழக்க வைக்கும்.

அதுபோன்று இயற்கை வடுக்களை கொஞ்சமும் நேரம் மறைய வைப்பதுதான் மேக்-அப். ஆரம்பத்தில் எனக்கும் ஏராளமான பருக்கள், வடுக்கள் இருந்தன. மால் போன்ற இடங்களுக்குச் செல்லும்போதும், அவர்கள் நம்மை வைத்து ட்ரையல் பார்ப்பார்களே, அப்போதுதான் முதல் முதலில் மேக்-அப் பற்றித் தெரிந்துகொண்டேன். என்னைப் பார்க்க எனக்கே மிகவும் பிடித்திருந்தது. ஃபிரெஷாக உணர்ந்தேன். அதன்பிறகுதான், அதனைத் தொடர்ந்து தீவிரமாகப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

அதிலும், திரைத்துறையில் மேக்-அப் மிகவும் அத்தியாவசியமாகவே இருக்கிறது. நிறையப் பேர் கலாய்ப்பார்கள். பரவாயில்லை. பண்ணட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்” என்று நிறைவு செய்கிறார் ரேஷ்மா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss reshma pasupileti beauty and makeup secrets tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com