தந்தையர் தினத்திற்கு வாழ்த்திய மகன் - பிக் பாஸ் ரேஷ்மாவின் நெகிழ்ச்சி பதிவு!
Bigg Boss Reshma Pasupuleti son wishes for Fathers day video கடந்த 20-ம் தேதி தந்தையர் தினத்தன்று சர்ப்ரைஸ் பிளான் போட்டிருக்கிறார் அவருடைய மகன் அர்ஜுன்.
Bigg Boss Reshma Pasupuleti son wishes for Fathers day video கடந்த 20-ம் தேதி தந்தையர் தினத்தன்று சர்ப்ரைஸ் பிளான் போட்டிருக்கிறார் அவருடைய மகன் அர்ஜுன்.
Bigg Boss Reshma Pasupuleti son wishes for Fathers day video Tamil News
Bigg Boss Reshma Pasupuleti son wishes for Fathers day video Tamil News : 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையம் ஆனவர் ரேஷ்மா பசுபலேட்டி. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஏராளமான விளம்பரங்கள், சின்னதிரை தொடர்களிலும் கம்மிட்டானார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடரில் பிசியாக இவருக்கு, தந்தையர் தினத்தன்று கியூட் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் ரேஷ்மாவின் மகன்.
Advertisment
சிங்கிள் மாம் ரேஷ்மா, தன் மகனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்து வருகிறார். ஆங்கில செய்தி வாசிப்பாளராக தன் திரை பயணத்தைத் தொடங்கியவர் பிறகு தொகுப்பாளினியாகவும், தற்போது தொழிலதிபராகவும் தனித்து வளர்ந்து வருகிறார். இந்நிலையில், தனி ஆளாக நின்று தன்னை நன்கு பார்த்துக்கொள்ளும் அம்மாவிற்கு, கடந்த 20-ம் தேதி தந்தையர் தினத்தன்று சர்ப்ரைஸ் பிளான் போட்டிருக்கிறார் அவருடைய மகன் அர்ஜுன்.
Advertisment
Advertisements
தந்தையர் தின வாழ்த்துகளோடு ஆரம்பமாகும் அந்த காணொளியில், தன் தாயைக் கூப்பிட்டு, அவருக்காக பியானோவில் இசைகிறார். அதனை ரசித்தபடி இருக்கும் ரேஷ்மாவிற்கு இறுதியில், தந்தையர் தின் வாழ்த்துகள் எனக் கூறுகிறார் மகன் அர்ஜுன். இருவரும் சிரித்தபடியே ஒருவருக்கொருவர் யார் யார் மீது அதிகம் அன்பு வைத்திருக்கிறார்கள் என்றபடி நிறைவடைகிறது அந்த காணொளி.
பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும் இந்த காணொளியை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நீண்ட கேப்ஷனையும் இணைத்திருக்கிறார் ரேஷ்மா. அதில், "அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல் எனக் குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள் மற்றும் அங்கீகரிக்கிறார்கள். இது நிபந்தனையற்றது மற்றும் என் மகனைப் பெற்றதுக்கு நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். மகிழ்ச்சியான பெற்றோர் என்றால் நிச்சயம் மகிழ்ச்சியான குழந்தையாக வளரும். அவர்களுக்கு ஒரு நண்பராக இருங்கள், ஒரு வழிகாட்டியாக இருங்கள். என்ன ஆனாலும் அவனுக்காக நான் இருப்பேன். அனைத்து ஒற்றைப் பெண்களுக்கும் மகிழ்ச்சியான தந்தையர் தின வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.