Bigg boss rio bigg boss 16 contestants: சன் மியூசிக் ரியோ என்றால் தெரியாதவர்களே இல்லை. தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ இப்போது வெள்ளித்திரையில் ஹீரோ.குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார் ரியோ ராஜ்.
Advertisment
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரியோ, அந்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக் கொண்டு சன் மியூசிக் பக்கம் ஒதுங்கினார். சன் மியூசிக்கில் ரியோவுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உருவாகினர். அதன் பின்பு கல்லூரி விழாக்கள், நடன விழாக்கள் என அனைத்திலும் ரியோவின் முகம் தென்பட ஆரம்பித்தது
ஆங்கரிங்கை தொடர்ந்து, நடிப்பிலும் ஆர்வம் காட்டிய ரொயோ விஜய் டிவியில் ஒளிப்பரபான சரவணன் மீனாட்சி சீரியலில் 3 ஆவது சீசனில் சரவணாக நடித்தார். அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடவே ரியோ ராஜ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருமுகமாக மாறிவிட்டார்.
Advertisment
Advertisements
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளார்கள் அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த பல்வேறு கலைஞர்கள் தற்போது சினிமாவில் வந்த வருகின்றனர். சிவகார்த்திகேயன் தொடங்கி தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின், ரக்சன் வரை தமிழ் சினிமாவில் கால்பதித்து விட்டனர். அந்த வகையில் ரியோவும் ஹீரோவாக களத்தில் இறங்கி விட்டார். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார்.
ரியோவின் இந்த வெற்றி கண்டிப்பாக அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தான் கூற வேண்டும். சாதாரண மிடில் கிளாஸ் குடுமபத்தில் பிறந்த ரியோ ஆரம்பத்தில் ஆங்கரிங் வாய்ப்புக்காக பல இடங்ளில் அலைந்திருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் தானே சாதிக்க முடியும் என நண்பர்களிடம் பலமுறை மனம் திறந்து பேசி இருக்கிறார். இதற்கிடையில் தனது காதலி ஸ்ருதியையும் ரியோ கரம் பிடித்தார். இப்போது அப்பாவும் ஆகி விட்டார்.
ரியோவின் அடுத்த படத்திற்காக அவரின் ரசிகர்கள் வெயிட்டிங். கலகல் பேச்சு, நையாண்டி சிரிப்பு என இருக்கும் ரியோ கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
சன் மியூசிக் ரியோ என்றால் தெரியாதவர்களே இல்லை. தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ இப்போது வெள்ளித்திரையில் ஹீரோ.குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார் ரியோ ராஜ்.காதல் மனைவி ஸ்ருதியை ரியோ கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் பின்பு திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இப்போது ரியோ அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்த முடிவெடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். மகள் பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில், ரியோ இந்த கடினமான முடிவெடுத்து உள்ளே சென்றுள்ளார். சென்ற வருடம் சாண்டி மாஸ்டர் இடத்தை ரியோ நிரப்புவார் என்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். ரியோவின் இந்த வெற்றி பயனம் கண்டிப்பாக பிரமிக்க வைக்கும் ஒன்று தான். கலகலப்பான ரியோ பிக் பாஸ் வீட்டில் எப்படி இருப்பார்? அவரின் நிஜ முகத்தை தெரிந்துக் கொள்ளலாமா? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil