Bigg Boss Sakshi Agarwal Diet Plan Tamil News : காலா உட்பட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் சாக்ஷி அகர்வால். லாக் டவுனுக்கு முன்பு எடை கூடியிருந்தனர், கடுமையான ஒர்க் அவுட் மூலம் உடல் எடையைக் குறைத்திருக்கிறார். இவருடைய இந்த ஃபிட்னெஸ்ல் காதல் எப்படி வந்தது என்பதைப் பற்றி சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"நாம் என்னதான் அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக ஸ்கின்கேர் ட்ரீட்மென்ட், ஒர்க் அவுட் செய்தாலும் நம் மனது ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் எப்போதுமே பொலிவாக இருப்போம். இதை முதலில் அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல எடை குறைக்கவேண்டும் என்று எண்ணினால், கலோரிகளை எந்த அளவிற்கு நாம் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். சிலர் சாப்பிடாமலேயே இருந்தால் எடை குறைந்துவிடும் என்று நினைத்து, ஒரு நாளுக்கு ஒரேயொரு ஆப்பிள் சாப்பிடுவார்கள். இதை எவ்வளவு நாள் கடைப்பிடிக்க முடியும்? மீண்டும் இயல்பாக நீங்கள் சாப்பிட ஆரம்பிக்கும்போது அதிகமாகத்தான் எடை போடும்.
நான் காலையில் எழுந்ததும் 10 ஊறவைத்த பாதாம் சாப்பிடுவேன். பிறகு நிச்சயம் இஞ்சி டீ குடித்துவிடுவேன். பிறகு, ப்ராக்கோலி, ஸுக்கினி, காளான் போன்றவற்றோடு 4 முட்டை வெள்ளை ஆம்லெட் சாப்பிடுவேன். நான் சைவம் என்பதால், காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அதிகம் சாப்பிடுவேன். காலை 11 மணிக்கு பழங்கள் ஏதாவது சாப்பிடுவேன். ஆனால், ஜூஸ் அதிகம் உட்கொள்ள மாட்டேன். அதில் சர்க்கரை அதிகமே தவிர நார்ச்சத்து இல்லை.
Advertisment
Advertisements
மதிய உணவிற்கு 2-3 ரொட்டி சாப்பிடுவேன். அது வெறும் கோதுமை மாவினால் செய்த ரொட்டி அல்ல. ரவை, சோயா, கோதுமை உள்ளிட்ட பல தானியங்கள் கொண்ட மாவினால் செய்த ரொட்டிதான் சாப்பிடுவேன். அதேபோல நான் அதிகம் வெள்ளை சாதம் சாப்பிட்டு 5 வருடங்கள் ஆகிறது. அதற்கு பதிலாக ப்ரவுன் ரைஸ் சாப்பிடுவேன். கீரை, காய்கறிகள்,பருப்பு வகைகள் அதிகம் சாப்பிடுவேன். அதேபோல இரவு வேளையில் கார்ன் மாவு மற்றும் க்ரீம் கலக்காத சூப் குடிப்பேன். இப்படிதான் என்னுடைய டயட் இருக்கும்.
உடலை எந்த அளவிற்கு அக்கறை எடுத்துப் பார்த்துக்கொள்கிறோமோ அதே அளவிற்கு மன ஆரோக்கியமும் அவசியம். நம் நாட்டில் அதற்கு அதிக அளவு அக்கறை செலுத்துவதில்லை. மனதளவில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான தெரபிஸ்ட்டை பார்ப்பது நல்லது. மனம்விட்டு யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்கள்" என்றபடி நிறைவு செய்தார் சாக்ஷி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil