Advertisment

ஜூஸ் வேண்டாம், இது மட்டும் போதும் - பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

Bigg Boss Sakshi Agarwal Fitness Secrets Tamil News தேன் மற்றும் எலுமிச்சை கலந்து முகத்தில் அப்ளை செய்வது மிகவும் நல்லது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Sakshi Agarwal Fitness Secrets Tamil News

Bigg Boss Sakshi Agarwal Fitness Secrets Tamil News

Bigg Boss Sakshi Agarwal Fitness Secrets Tamil News : பிக் பாஸ் தொடர்ந்து ஃபிட்னெஸ் மற்றும் பல்வேறு விதமான போட்டோஷூட்களில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால், ஆரோக்கியமான உடலமைப்பிற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பகிர்ந்துகொண்டார். வீட்டிலிருந்தே சருமம் மற்றும் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று சாக்ஷி பகிர்ந்தவை இங்கே…

Advertisment

"நாம் போடும் உடைகள், மேக்,அப், ஹேர்ஸ்டைல் எல்லாமே சரியாக இருந்தாலே போதும், அதற்கேற்ற ஆட்டிடியூட் நமக்கு வந்துவிடும். அந்த வகையில் எனக்குப் பாவாடை தாவணி, புடவை எல்லாம் மிகவும் பிடிக்கும். போட்டோஷூட்டில் எப்போதுமே என்னுடைய முதல் சாய்ஸ் அதுதான்.

அழகு பொறுத்தவரையில், சர்ஜரி செய்து அழகாக்குவது எல்லாம் எனக்குப் பிடிக்காது. நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் எப்போதுமே அழகு. அதை மெருகேற்றிக்கொள்ளலாமே தவிர மாற்ற விரும்பமாட்டேன். சரும பாதுகாப்பிற்காக நான் பெரும்பாலும் கிச்சனில் இருக்கும் பொருள்களைத்தான் உபயோகிப்பேன். அதில், தேன் மற்றும் எலுமிச்சை கலந்து முகத்தில் அப்ளை செய்வது மிகவும் நல்லது. அதேபோல ஆரோக்கியமான சருமத்திற்கு மாய்ஸ்ச்சர் கொடுப்பது அவசியம். தண்ணீர் போதுமான அளவு குடிக்கவேண்டும்.

நான் அதிகமா பழங்களைத்தான் உட்கொள்வேனே தவிர ஜூஸ் குடிக்கவே மாட்டேன். பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. உதாரணத்திற்கு ஆரஞ்சு பழத்தில், அதன்மேல் இருக்கும் வெள்ளை நாரை எடுத்துச் சாப்பிடுவார்கள். அது மிகவும் தவறு. அதில்தான் அதிகமான நார்ச்சத்து உள்ளது. பழத்தை சாப்பிடுவதிலும் முறைகள் இருக்கின்றன. அப்போதுதான் முழுமையான சத்து நமக்கு வந்து சேரும் என்பதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நான் பெரிதாக டயட் இருக்கமாட்டேன். நான் எடுத்துக்கொள்ளும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துக்கொள்வேன். ஃப்ரைஸ், பர்கர் போன்ற ஜங்க் உணவு வகைகளைத் தொடவே மாட்டேன். 12-ம் வகுப்பிலிருந்து ஃபிட்னெஸ் என்கிற ஒன்றில் அதிகம் கவனம் செலுத்துவேன். என் மனஅழுத்தத்திற்கான ஒரு தீர்வாக இந்த ஒர்க் அவுட் இருக்கிறது. லாக்டவுனில் ஜிம் பூட்டியபோதிலும், வீட்டில் இருக்கும் சிறிய பொருள்களை வைத்து செய்யலாம். அதற்கான காணொளியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நல்ல வரவேற்பும் கிடைத்தது".

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sakshi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment