‘காலா’ உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர் சாக்ஷி அகர்வால். எப்போதும் விதவிதமான உடைகள் அணிந்து போட்டோஷூட் எடுத்துக்கொள்ளும் சாக்ஷி, சமீபத்தில் தன்னுடைய வார்ட்ரோபை சுற்றிக் காட்டினார். வீடு முழுக்க அலமாரிகள்தான் இருக்கின்றதா என்கிற அளவிற்கு விதவிதமான ஆடைகள் மற்றும் காலணிகள் நிரம்பிய வார்டுரோபில் என்னவெல்லாம் ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் பார்த்ததைப் போலவே, வீட்டிலும் எந்நேரமும் ஷார்ட்ஸ் உடுத்துவதுதான் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். அதனால், விதவிதமான மினி சைஸ் ஷார்ட்ஸ் இவரிடம் ஏராளமாகக் குவிந்து கிடந்தன. என்றாலும், இவர் கல்லூரி காலத்தில் உடுத்திய குர்த்தி மற்றும் ஐடி-ல் பணியாற்றியபோது உபயோகப்படுத்திய உடைகள் என அத்தனையையும் இன்றும் வைத்திருக்கிறார். இதுபோன்ற உடைகளைக் கூட சாக்ஷி உடுத்துவாரா என்றிருந்தது அந்த பழைய காலத்து கலெக்ஷன்.

இப்போதும் தமிழ்நாட்டில் சல்வார் கமீஸ் போன்ற உடைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார். வெளிநாட்டில் போட்டுக்கொள்வதற்கென்று தனி அலமாரி. அந்த வார்ட்ரோப் முழுவதும் கைக்குட்டை அளவில் இருக்கும் சிறிய ஷார்ட்ஸ், கவுன் போன்றவைதான். ஃபிட்னெஸ் மீது அதிக ஈர்ப்புள்ள சாக்ஷிக்கு, உடலை ஒட்டியிருக்கும் ஆடைகள் மீதுதான் ஆர்வம் அதிகம். அதனால் பாடிகான் ட்ரஸ்தான் இவரிடம் அதிகம் இருக்கின்றன. மேலும், பூப்போட்ட டிசைன் இவருடைய ஃபேவரைட்.

மேடை நிகழ்ச்சிகளில் உடுத்தும் கற்கள் பதித்த க்ராப் டாப் கலெக்ஷன் அனைத்தும் வேற லெவல். அவை அனைத்தும் பிரேத்தியேகப்பாக துபாயிலிருந்து வாங்கி வந்திருக்கிறார். அதேபோல இன்னும் உபயோகப்படுத்தாத சிண்ட்ரெல்லா உடையும் ஒன்று கியூட்டாக உறங்கிக்கொண்டிருந்தது. சாக்ஷிக்கு பிடித்த நிறம் கருப்பு என்பதால், அந்த நிறத்தில் மட்டுமே எண்ணிலடங்கா உடைகள்.
பிறகு, ஸ்டில்லடோஸ், கேன்வாஸ், பூட்ஸ் என விதவிதமான காலணிகளுக்கென தனி அலமாரிகள். கூடிய விரைவில் வெளிநாட்டு அழகிகள் வீட்டில் இருக்கும் வாக் இன் வார்ட்ரோப் போல அமைக்கவேண்டும் என்பது சாக்ஷியின் ஆசையாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil