Bigg Boss Samyuktha Diet Plan Latest Video : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் ஏராளமான சுவாரசிய காணொளிகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், தன்னுடைய ஒருநாள் பயண வீடியோவில் அவர் என்ன சாப்பிடுவார் என்பதைக் காண்பிக்கவில்லையே என்கிற மக்களின் கோரிக்கையை ஏற்று, அவருடைய டயட் பிளானை மட்டும் தனி வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
"என்னுடைய நாள் எப்போதுமே ஒரு கப் காபியுடன்தான் ஆரம்பம் ஆகும். நம் முன்னோர்களிலிருந்து அனைவரும் காபி குடிக்கிறோம். ஆனால், நடுவில் காபி உடலுக்கு கேடு என்றெல்லாம் கூறினார்கள். அளவுக்கு அதிகமான எதுவுமே உடலுக்கு கேடுதான். ஆனால், காபியுடன் ஆரம்பமாகும் இந்த நாள் ஆரோக்கியமானதுதான்" என்றுகூறி வழக்கம்போல காஸ்ட்லீ காபி மெஷினிலிருந்து காபி டிகாக்ஷன் எடுத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை கலந்து குடித்தார்.
பிறகு, "10 மணிக்கு ஆரஞ்சு ஜூஸ் குடிப்பேன்" என்றபடி தன்னுடைய சிட்ரஸ் மேக்கரில் ஆரஞ்சு ஜூஸ் குடித்தார். "நான் இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருக்கிறேன். அதனால், காலையிலிருந்து மதியம் வரை உணவு எதுவும் சாப்பிடுவது இல்லை. ஆனால், இந்த டயட் எல்லோருக்கும் ஒத்துவருமா என்பது கேள்விக்குறி. சிலர் பசி தாங்க மாட்டார்கள். அவர்கள் நிச்சயம் இந்த வகையான டயட்டை தவிர்க்கலாம். மதிய நேரங்களில் நன்றாகப் பசிக்கும் என்பதால், நல்லாவே சாப்பிடுவேன். இதுதான் வேண்டும் என்றெல்லாம் எனக்கு எந்தவித ஆப்ஷனும் இல்லை. எது வேண்டுமானாலும் சாப்பிடுவேன். ஆனால், எந்த அளவில் அளவில் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.
சிலர் உடல் எடை குறைக்கக் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால், உடல் எடை குறைப்பு முழுவதும் 80% நாம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது. அளவான சாப்பாடு சாப்பிட்டு, கொஞ்சம் உடற்பயிற்சி செய்தாலே போதும். என்னுடைய மதிய உணவில் நிச்சயம் முட்டை, மீன், இறால் உள்ளிட்ட புரத சத்து கொண்ட உணவுகள் இருக்கும். உடலில் புரதம் தங்காது என்பதால் தினமும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். அதேபோல காய்கறிகளும் மிகவும் முக்கியம். ஒரு கை அளவு தினமும் கார்ப்ஸ் சாப்பிடலாம்.
ஜிம் ஒர்க் அவுட் முடிந்தபிறகு, 4 மணிபோல ப்ரோடீன் ஷேக் குடிப்பது வழக்கம். எவ்வளவுக்கு எவ்வளவு சத்துள்ள உணவுகள் எடுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. அந்த வரிசையில் கண்டிப்பாக தினமும் பழங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில்தான் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ், வைட்டமின் போன்றவை அதிகம் இருக்கின்றன. அதேபோன்று பழத்திற்கு பதிலாக நட்ஸ் வகைகளையும் சாப்பிடலாம். நம் பசிக்கு ஏற்றபடி சாப்பிடுவது சிறந்தது. அந்த வரிசையில் இன்று இரவு பிரெட் அண்ட் ஜாம் போதும். சாப்பிடுவது போலவே தூங்குவதும் மிக முக்கியம். எனவே, நன்றாக தூங்குங்க" என்றபடி காணொளியை நிறைவு செய்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.