Advertisment

'இவ்வளவு பெரிய ஃப்ரிட்ஜ் இருந்தும் அது மட்டும் இல்லையே' - பிக் பாஸ் சம்யுக்தாவின் ஃப்ரிட்ஜ் டூர்!

Bigg Boss Samyuktha Fridge Tour Youtube Video தினசரி உணவில் 80 சதவிகிதம் ஆரோக்கிய உணவும், 20 சதவிகிதம் சிப்ஸ், இனிப்பு வகைகள் போன்ற ஜங்க் உணவுகளையும் உட்கொள்வாராம்.

author-image
WebDesk
Jun 29, 2021 16:25 IST
New Update
Bigg Boss Samyuktha Fridge Tour Youtube Video Tamil News

Bigg Boss Samyuktha Fridge Tour Youtube Video Tamil News

Bigg Boss Samyuktha Fridge Tour Youtube Video Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த வேகத்தில் தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த சம்யுக்தா, அதில் ஏராளமான கன்டென்ட்டுகளை பதிவேற்றி வருகிறார். நடனம் முதல் ஹோம் டூர் வரை ஏராளமான Vlog கன்டென்ட் கொடுத்துவரும் சம்யுக்தா, சமீபத்தில் ஃப்ரிட்ஜ் டூர் காணொளியைப் பதிவேற்றியுள்ளார். 3.5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்தக் காணொளியில் அப்படி என்ன ஸ்பெஷல்?

Advertisment
publive-image

தனக்கு கிச்சனில் மிகவும் பிடித்தமான விஷயம் ஃப்ரிட்ஜ் என்று ஆரம்பிக்கும் சம்யுக்தா, அதனை இந்த உலகத்திலேயே முக்கியமான கண்டுபிடிப்பு என்று பாராட்டுகிறார். 'ஆமாம், பின்னே யாரு தினமும் சமைக்கிறது?' என்கிற மைந்த வாய்ஸையும் சத்தமாகவே பேசினார். தன்னிடம் இருப்பது மிகவும் பழைய ஃப்ரிட்ஜ் என்று வருத்தப்படும் சம்யுக்தாவிற்கு இதன் மேல் ஒரு வருத்தமும் உண்டு. அந்த ஃப்ரிட்ஜ் மீது மேக்னட் ஸ்டிக்கர்ஸ் ஒட்டமுடியவில்லையாம். அதுதான் அவருடைய மிகப் பெரிய கவலை.

publive-image

இந்த டபுள் டோர் ஃப்ரிட்ஜில் சைல்டு லாக் மற்றும் வெகேஷன் மோட் என இரண்டு அசத்தலான அம்சங்கள் உள்ளன. பெரியவர்களின் உதவி இல்லாமல் குழந்தைகளால் அந்த ஃபிரிட்ஜை இயக்க முடியாது. இதுதான் சைல்டு லாக் மோடின் வசதி. அதேபோல வெளியூருக்குச் செல்வது போல் இருந்தால், வெகேஷன் மோட் ஆன் செய்தால், மின்சாரம் அந்த அளவிற்கு செலவாகாதாம்.

publive-image

பிறகு ஃபிரிட்ஜின் உள்ளே சுற்றிக்காட்டினார். வழக்கம்போல, தயிர், பால், வெண்ணெய், முட்டை எனப் புரத சத்துகள் நிறைந்த உணவு வகைகள் ஒரு அடுக்கிலும், சாலட், பழ வகைகள் போன்றவை ஒரு ரேக்கிலும் வைத்திருந்தார். சம்யுக்தா தன் டயட்டில் 80-20 எனும் ரூல் பின்பற்றுவாராம். அதாவது, தன் தினசரி உணவில் 80 சதவிகிதம் ஆரோக்கிய உணவும், 20 சதவிகிதம் சிப்ஸ், இனிப்பு வகைகள் போன்ற ஜங்க் உணவுகளையும் உட்கொள்வாராம். அத்தைதான் தன் மகனுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்.

publive-image

சம்யுக்தாவிற்கு வேர்க்கடலை மாங்காய் மசாலா மிகவும் பிடிக்குமாம். அதனால், ஃப்ரிட்ஜில் மாங்காய் போன்றவை உள்ளன. மேலும், தன்னுடைய காய்கறி மற்றும் பழங்கள் ரேக்கையும் திறந்து காட்டினார். தினமும் காலையில் பருகும், எலுமிச்சை, வெல்லம், இஞ்சி ஜூஸ் பாட்டிலை பிரத்தியேகமாகக் காட்டினார். பிறகு சாக்லேட், தக்காளி, சோயா போன்ற சாஸ் வகைகள் ஒரு ரேக்கிலும், ஆவக்காய் ஊறுகாய், ஜாம் உள்ளிட்டவை ஒரு ரேக்கிலும், சாக்லேட்ஸ் மற்றொரு ரேக்கிலும் வைத்திருந்தார்.

மற்றொரு கதவில் ஐஸ் ட்ரே, துருவிய தேங்காய் ஸ்டோரேஜ், சிக்கன், மட்டன், இறால் உள்ளிட்ட மாமிசங்களை சேகரித்து வைத்திருந்தார். இவ்வளவு பெரிய ஃபிரிட்ஜை சுற்றிக்காட்டு விட்டு, தன் மகனுக்கு அதிலிருந்து சாக்லேட் எடுத்துக் கொடுப்பதோடு நிறைவாகிறது இந்த காணொளி. தற்போது வரை நாற்பதாயிரத்துக்கும் மேலானவர்கள் இவருடைய சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bigg Boss Tamil #Bigboss Samyuktha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment