Bigg Boss Samyuktha Handbag Secrets Tamil News : மாடலிங் துறையில் படுபிஸியாக சுழன்றுகொண்டிருந்த சம்யுக்தாவை பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பரீட்சையப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, எப்போதுமே லைம் லைட்டில் இருக்கவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதில் விதவிதமான காணொளிகளைப் பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் தன்னுடைய ஹேண்ட்பேக்கில் என்னவெல்லாம் உள்ளன என்பதைப் பதிவு செய்து அப்லோட் செய்திருந்தார். 85,000 வியூஸ்களுக்கு மேல் பெற்ற இந்த வீடியோவில் என்ன ஸ்பெஷல்?

ஏற்கெனவே தன் ஹாண்ட்பேக்கில் என்னவெல்லாம் இருக்கும் என்பதை பற்றி விரிவாக காணொளி போட்டிருந்தாலும், இது அப்டேட்டட் வெர்ஷனாம். ஆம், ஹாண்ட்பேக் மற்றும் அதனுள் இருக்கும் பொருள்கள் அனைத்தையும் மாற்றிவிட்டாராம். அதைதான் பிரேத்தியேகமாக இந்த காணொளியில் அவர் பகிர்ந்திருந்தார்.

“இப்போது மூன்று ஹேண்ட்பேக் உள்ளது. அதில், ஹேண்ட்பேக் இதுதான்” என்றபடி தன்னுடைய நாய்க்குட்டியைக் காண்பித்தார்! தான் எப்போதும் விலங்குகளின் தோல்களிலான பொருள்களைப் பயன்படுத்தவே மாட்டாராம். அதற்குத்தான் தன்னுடைய நாய்க்குட்டியை முதல் முதலாக ஸ்க்ரீனில் தோன்ற வைத்தார். பிறகு, “நான் எப்போதுமே இரண்டு வகையான ஹேண்ட்பேக் பயன்படுத்துவேன். இரண்டுமே பேக்-பேக் மாடல்தான். என் பையனைத் தூக்கி விளையாடுவதற்கு இதுபோன்ற பேக்தான் உபயோகமாக இருக்கும்” என்றபடி தன் பேக்கில் இருக்கும் உணவு பண்டங்களை முதலில் காட்டினார்.

பிறகு, ஒன்றுக்கும் மேற்பட்ட ஹேர் பேண்டுகள், பட்டாம்பூச்சி கிளிப் ஆகியவற்றைக் காண்பித்தது மட்டுமல்லாமல், அதனை எப்படிப் பயன்படுத்துவார் என்பதை செய்தும் காட்டினார். பிறகு, பேகிலிருந்து தன் வாலட்டை எடுத்து காண்பித்தார். அதனுள் ஒரு க்ரெடிட் கார்ட், ஆதார் கார்ட், ஓட்டுநர் உரிமம், கொஞ்சம் பணம் மற்றும் சம்யுக்தாவும் தன் மகனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவை இருந்தன. அடுத்தது மொபைல் சார்ஜர், சன் க்ளாஸ் இருந்தன. கண்களில் மேக்-அப் போடவில்லை என்றால், சில சமயங்களில் நாம் டல்லாக தெரிவோம். அப்பொழுதெல்லாம் இந்த க்ளாஸ் போட்டுக்கொள்ளலாம் என்று தான் ஏன் சன் க்ளாஸ் பயன்படுத்துகிறார் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் சம்யுக்தா.
மொபைலைவிட இந்த க்ளாஸைதான் பாதுகாப்பாக பார்த்துப்பாராம். பிறகு இன்ஸ்டன்ட் அழகு தரும் லிப்ஸ்டிக், ஏர்பாட், பாக்கெட் பிளானர், பென், பாக்கெட் பெர்ஃபியும், சில்லறை, மாய்ஸ்ச்சரைசர், அறையின் சாவி, மினி கண்ணாடி ஆகியவை இருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil