scorecardresearch

ரூ.5000 செலவில் மதிய உணவு – பிக் பாஸ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் வீடியோ!

Bigg Boss Samyuktha Latest Lunch Video Tamil இம்முறை பனீர் உட்பட சைவ உணவுகளை சுவைத்தார். பிறகு தனக்கு மிகவும் பிடித்த மட்டன் பிரியாணியை ஒரு கட்டுக்கட்டினார்.

Bigg Boss Samyuktha Latest Lunch Video Tamil
Bigg Boss Samyuktha Latest Lunch Video Tamil

Bigg Boss Samyuktha Latest Lunch Video Tamil : சமீபத்தில் திருவனந்தபுரத்திற்குச் சுற்றுலா சென்ற பிக் பாஸ் புகழ் சம்யுக்தா, அங்கு அவர் கண்டு களித்த அழகிய காட்சிகளையும், மதிய உணவிற்கு இவ்வளவு  ஆச்சரியப்பட்ட விஷயங்களையும் அவருடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். அப்படி என்னதான் அந்த ஹோட்டலில் ஸ்பெஷல் என்பதைப் பார்ப்போமா!

திருவனந்தபுரத்திலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஹோட்டல்களில் ஒன்று, வில்லா மாயா. உலகளவில் சிறந்த உணவகம் என்கிற அங்கீகாரமும், இந்தியாவிலேயே 3-வது சிறந்த உணவகமாகவும் இது இருக்கிறது. இந்த உணவகம்தான் சம்யுக்தாவின் ஃபேவரைட் உணவகமாம். அவர் எப்போது திருவனந்தபுரம் வந்தாலும், இந்த உணவகத்தை மட்டும் மிஸ் செய்யமாட்டார். இரண்டு வருடத்திற்கு  ஹோட்டலுக்கு வந்திருக்கும் சம்யுக்தா, எப்படி சாப்பிடாமல் செல்வார்?

Bigg Boss Samyuktha

“இந்த ஹோட்டலைச் சுற்றி ஏராளமான சுவாரசிய விஷயங்கள் உள்ளன. அதில், இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய குட்டையில் கொஞ்சும் மீன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறிய யானை சிற்பங்கள் உள்ளன. அதன் தும்பிக்கையிலிருந்து தண்ணீர் வருவது போன்ற ஃபவுண்டேஷன் செட்-அப் என்னுடைய ஆல்-டைம் ஃபேவரைட்” என்றபடி அத்தனை ஃபேவரைட் லிஸ்ட்களை சொல்கிறார் சம்யுக்தா.

சுக்கு காபி மற்றும் பாப்படி சாட் இரண்டும் இலவசமாக, இல்லை இல்லை காம்ப்ளிமென்ட்டரியாக கொடுக்க, அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டார் சாம். உள்ளே ஓர் மாளிகை போல் செட்-அப், பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. கோவிட் பரவல் ஏற்பட்டதிலிருந்து சில மாற்றங்களைச் செய்துள்ள இந்த ஹோட்டலில், அவருக்குப் பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்தார். ஒருவழியாக அவர் ஆர்டர் செய்தவை எல்லா டேபிளுக்கு வர, ரசித்து ருசிக்க ஆரம்பித்தார்.

செட்டிநாடு உணவு மீன் ஃப்ரை, ஸ்க்விட் போன்ற கடல் வாழ் உயிரினங்களை வரிசையாக உட்கொண்டார். பிறகு அங்குள்ள தமிழ்நாட்டு செஃப் ஒருவரோடு உரையாடிவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். ஆனால், இம்முறை பனீர் உட்பட சைவ உணவுகளை சுவைத்தார். பிறகு தனக்கு மிகவும் பிடித்த மட்டன் பிரியாணியை ஒரு கட்டுக்கட்டினார். இதனைத் தொடர்ந்து, டெஸெர்ட் வகைகள்.

எவ்வளவுதான் வயிறு நிரம்ப சாப்பிட்டாலும், இந்த டெஸெர்ட் சாப்பிடுவதற்கு மட்டும் தனி வயிறு வந்துவிடும். அந்த அளவிற்கு அதன் மீதான ஆசை இருக்கும் என்றபடி தனியாக ஒரு பிளேட்டில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த டெஸெர்ட் வகைகளை சாப்பிட்டார். இதுதான் இறுதிபோல என்று நினைத்தால், இலவசமாக தர்பூசணி மேலே தேன் ஊற்றி வைத்ததையும் சாப்பிட்டார். இதையடுத்துதான் அந்த பில் மேட்டர். ஆம், இவர் சாப்பிட்ட இந்த உணவுகள் அனைத்தும் சேர்த்து 5,500 ரூபாய் பில். இதனைக் கட்டிவிட்டு எஸ்கேப் ஆனார் சாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss samyuktha latest lunch video tamil