New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/Samyukthaup.jpg)
Bigg Boss Samyuktha Latest Photoshoot
Bigg Boss Samyuktha Latest Photoshoot
Bigg Boss Samyuktha Latest Photoshoot Tamil : பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவின் சமீபத்திய போட்டோஷூட் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது. அப்படி என்னதான் ஸ்பெஷல் அந்த போட்டோஷூட்டில்? பார்ப்போம்!
மாடலாக பல முன்னணி பிராண்டுகளில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 மூலமாகத் தமிழ் மக்களுக்கு பரீட்சையமான முகமாக மாறினார் சம்யுக்தா. ஆரம்பத்தில் அனைவரின் ஃபேவரைட் போட்டியாளர்களின் பட்டியலில் இருந்தாலும், நாளடைவில் ஆரியிடம் நடந்த சில வாக்குவாதங்களால் பலரின் வெறுப்புகளை சம்பாதித்தார். இதனால் குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். என்றாலும், அவருடைய பல நேர்காணல் அவர் மீது இருந்த நெகட்டிவ் ஷேடுகளை தவிடுபொடியாகியது.
சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரையன் எனும் மகனும் உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரையனையும் லைம்லைட்டுக்கு கொண்டுவந்தார் சாம்.
தொடர் உடற்பயிற்சி மூலம் தன் உடலமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சம்யுக்தா, இப்போது மாடலிங்கில் பயங்கர பிசி. அதிலும் சமீபத்தில் நடைபெற்ற போட்டோஷூட் ஹிட் ரகம். ஓர் காலண்டர் விளம்பரத்துக்காக 2 நாய்களைப் பிடித்தபடி, சில்வர் நிற பலூன் ஸ்லீவ் சைடு ஸ்லிட் கவுன் அணிந்து சம்யுக்தா கொடுத்திருக்கும் பாஸ் க்ளாசி டச்.
உடைக்கு ஏற்றபடி சில்வர் வண்ண முக ஒப்பனை மற்றும் அதற்கு மேட்ச்சான ஹீல்ஸ். சம்யுக்தாவின் இந்த யூத் டிரான்ஸ்ஃபர்மேஷனை கண்ட நெட்டிசன்கள் பல பாசிட்டிவ் கமென்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.