Bigg Boss Samyuktha Room Tour Viral Video Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்ததோ இல்லையோ, பெரும்பாலானவர்கள் தங்களுக்கென்று தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதன்மூலம் பணம் மற்றும் பாப்புலாரிட்டியை சம்பாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் கடந்த பிக் பாஸ் சீசனில் பங்குபெற்ற சம்யுக்தா, ஏராளமான காணொளிகளைப் பதிவேற்றி வருகிறார். அதில் சமீபத்தில் தன்னுடைய ரூம் டூர் வீடியோவை பதிவேற்றி, 3 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கிறார். அப்படி என்னவெல்லாம் அவருடைய அறையில் ஸ்பெஷல்?

ஏற்கெனவே வார்டுரோப் டூர் பதிவேற்றி, பெரும்பாலான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சம்யுக்தா. அந்த அளவிற்கு பிரம்மாண்டங்கள் நிறைந்திருந்தது. அந்த வரிசையில் தன்னுடைய பிரைவேட் அறையை டூராக மாற்றி அப்லோட் செய்திருக்கிறார் சாம். அதில், “என் அறைக்கு இரண்டு கதவுகள் உள்ளன. ஒன்று பப்பி கதவு மற்றொன்று மெயின் கதவு” என்றுகூறியபடி, கதவிற்கும் சுவருக்கும் இருக்கும் சில நுணுக்கங்களையும் பகிர்ந்துகொண்டார். தன்னுடைய பொருள்கள் மற்றும் ஆடைகளை வைத்துக்கொள்ள இரண்டு பெரிய அறைகளை இணைத்து ஒரே அறையாக மாற்றியமைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, பொருள்கள் வைப்பதற்கு நிறைய இடம் தேவை என்பதால், ஏற்கெனவே இருந்த சுவரைக் கொஞ்சம் தள்ளி வைத்தாராம். இவருடைய அறையில் எங்குத் திரும்பினாலும் பெரிய பெரிய கண்ணாடி உள்ளது. அதற்குக் காரணம், இப்படி கண்ணாடி வைத்தால் அறையின் அளவு சற்று பெரிதாகத் தெரியுமாம். பிறகு அந்த பெரிய அறை வேலை செய்யும் இடம் மற்றும் ஓய்வு எடுக்கும் இடம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதில் முதலில் ஓய்வு எடுக்கும் பக்கம் சுற்றிக்காட்டினார். “நல்ல மேட்ரஸ் வாங்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால் நம் ஆரோக்கியமான உடலுக்கு நல்ல தூக்கம் அவசியம். அதனால், சரியான பெட் வாங்குவதற்கு யோசிக்கக்கூடாது” என்கிற டிப்ஸையும் நமக்கு வழங்கினார். அடுத்ததாக, “இந்த இரண்டு தூண்கள் எதற்கு இருக்கிறது என்றால், சும்மாதான் இருக்கிறது. அழகுக்காக என்று சொல்லலாம். நான் இரண்டு தூண்களுக்கும் இடையே சென்று அப்போப்போ பார்ப்பேன். காரணம், எடை போட்டிருக்கேனா இல்லை என்பதற்குத்தான்” என்றபடி இரு தூண்களுக்கு இடையே சென்று பார்த்தார். ‘ஒல்லியாகத்தான் இருக்கிறேன்’ என்று கூறி மனநிம்மதி கொண்டார்.

பிறகு, அந்த அறையிலிருந்த வயலின், பெரிய வித்தியாசமான ஸ்பீக்கர், டிவி, போர்ட்டபிள் சேர் ஆகியவற்றைக் காண்பித்தார். பிறகு, “என்னிடம் இரண்டு எடை பார்க்கும் மெஷின் உள்ளது. இரண்டில் எது எடை கம்மியாக காட்டுகிறதோ அதை எடுத்துக்கொள்வேன்” என்றபடி குறுகிய பால்கனி பக்கம் சென்றார். அங்குப் போடப்பட்டிருந்த சேர் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அது டைனிங் ஹாலில் போடலாம் என்று ஆசையாக ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கினாராம். ஆனால், தரம் குறைவாக இருந்ததால், பால்கனியில் போட்டுவிட்டாராம். அதனால் ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருங்கள் என்று நம்மையும் எச்சரித்தார்.
சம்யுக்தா, மாடல், நடிகை மட்டுமல்ல, இவர் ஒரு சிவில் இன்ஜினியரும்தான். அதனால், சமீபத்தில் இவர் வாங்கிய அதிக வேகம் கொண்ட எளியன்வேர் கம்ப்யுட்டர் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அந்த கம்பியூட்டரில் வேலை செய்து கலைத்துவிட்டால், பக்கத்திலேயே இருக்கும் தன்னுடைய பீன் பேக்கில் படுத்துக்கொள்வாராம். ஆனால், கொஞ்சம் நாள்கள் முன்பு அந்த பேகில் அவருடைய செல்ல பிராணி சிறுநீர் கழித்து ஒரே நாற்றமாம். அந்த சீக்ரெட்டையும் இந்தக் காணொளியில் பகிர்ந்துகொண்டார்.
இரண்டு அறையை ஒரே அறையாக மாற்றியமைத்ததால் இரண்டு பாத்ரூம் உள்ளதாம். நிச்சயமாக பாத்ரூம் டூர் போடா மாட்டேன் என்று கூறியபடி ஒரு பாத்ரூமை பழைய பொருள்கள் சேமிக்கும் ஸ்டோர் ரூமாக மாற்றிவிட்டதாகக் கூறினார். இறுதியாக தன்னுடைய ட்ரெஸ்ஸிங் டேபிளை காண்பித்தபடி காணொளியை நிறைவு செய்தார் சம்யுக்தா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil