ஆட்டோக்காரன் பாடல், டைனோசர், வெளிநாட்டு பெட்ஷீட் - பிக் பாஸ் சம்யுக்தா வைரல் வீடியோ!
Bigg Boss Samyuktha son Rayan Room Tour Video 3 வயதில் ரயனுக்கு ஆட்டோதான் மிகவும் பிடிக்கும். அதனால், வீடு முழுவதும் ஏராளமான ஆட்டோ பொம்மைகள் இருக்கும்.
Bigg Boss Samyuktha son Rayan Room Tour Video 3 வயதில் ரயனுக்கு ஆட்டோதான் மிகவும் பிடிக்கும். அதனால், வீடு முழுவதும் ஏராளமான ஆட்டோ பொம்மைகள் இருக்கும்.
Bigg Boss Samyuktha son Rayan Room Tour Video : பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பொதுமக்களின் பார்வைக்கு வந்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவர் மீது நல்ல விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த ஆரியுடன் நடந்த மோதலால் மக்களின் வெறுப்புகளை சம்பாதித்தார். என்றாலும், நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு மக்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
Advertisment
தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்தவர், அதில் ஹோம் டூர், ஃப்ரிட்ஜ் டூர் என தன் சொகுசு வீட்டை சுற்றிக்காட்டி காணொளி அப்லோட் செய்தவர், தற்போது தன்னுடைய மகன் ரயன் அறையை சுற்றிக்காட்டியிருக்கிறார். "ஒரு விவிஐபி ரூம் போகப்போகிறோம். முதலில் அவரிடம் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்" என்றபடி ரயனின் அறையைத் தட்டி அனுமதி வாங்கினார் சம்யுக்தா.
Advertisment
Advertisements
விசாலமான அறை, பிரைட் நிறங்கள் என சொகுசு அறைதான் ரயனுக்கும். தாராளமாக உருண்டு பிரண்டு படுக்கும் பழக்கம் உடைய ரயனுக்கு, கிங் சைஸ் பெட். அதில் அவருடைய ஃபேவரைட் போர்வையைத்தான் முதலில் காட்டினார் சம்யுக்தா. அது லாங்கி பாக்ஸ் எனும் ஓர் யுடியூபர் புகைப்படம் கொண்டது. வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்து வாங்கியதாம். அப்படியே, அங்கிருந்த கியூட்டான குப்பைத் தொட்டியையும் காட்டினார்.
பிறகு, அறையிலிருக்கும் போர்டு கேம்ஸ் ரேக், டிவி, புத்தகங்கள் ஆகியவற்றைக் காட்டினார். இந்த புத்தகங்களை யார் படிப்பார்கள் என்று சம்யுக்தா வினவியதற்கு, "நான் படிக்க மாட்டேன், அம்மா படித்துக் காட்டுவார்" என்று மிகவும் கியூட்டாக சொன்னார் ரயன். அடுத்ததாக சிறு வயதிலிருந்து ரயனுக்கு பிடித்த விளையாட்டுப் பொருள்களைப் பற்றிக் கூறினார் சம்யுக்தா.
"3 வயதில் ரயனுக்கு ஆட்டோதான் மிகவும் பிடிக்கும். அதனால், வீடு முழுவதும் ஏராளமான ஆட்டோ பொம்மைகள் இருக்கும். அந்நேரத்தில் ரயனுக்கு மிகவும் பிடித்த பாடல், 'நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்' பாடல்தான். எந்நேரமும் அதைப் போடச்சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பான். 4 வயதில் டைனோசர் மீது பிரியம் ஏற்பட்டது. என்ன வகை டைனோசர்கள் என்று சரியாக சொல்லிவிடுவான்.
பிக் பாஸ் கொடுத்த டைனோசரும் வீட்டில் இருக்கிறது" என்று நிறைவு செய்தார் சம்யுக்தா. இப்போது போர் வீரர்கள் ரசிகனாக இருக்கும் ரயன், ஏராளமான துப்பாக்கிகளை சேகரித்து வருகிறார். மேலும், வெளியூருக்குச் செல்லும்போதெல்லாம் பொம்மைகள் வங்கச் சொல்லி அடம் பிடிக்கும் ரயனின் ஆசைகளை நிறைவேற்றிவிடுகிறார் சம்யுக்தா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil