Bigg Boss Samyuktha Wardrobe Saree Collection Tamil
Bigg Boss Samyuktha Wardrobe Saree Collection Tamil : விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனக்கென பல ரசிகர்களைப் பெற்றவர் முன்னணி மாடல் சம்யுக்தா. பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி, பிறகு அதற்கான விளக்கத்தையும் கொடுத்து இன்றும் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குச் செந்வதற்கு முன்பே, இவருடைய பரந்த விரிந்த வீட்டைச் சுற்றி காட்டினார்கள் சில யூடியூப் சேனல்கள். ஆனால், அப்பொழுது அதிகம் கவனம் ஈர்க்காதவர், பிக் பாஸ் என்ட்ரியைத் தொடர்ந்து மக்கள் அவரை பின்தொடர்கின்றனர். அந்த வரிசையில் அவருடைய லக்ஜூரி அலமாரியைச் சுற்றிக்காட்டியுள்ளார் சாம்.
Advertisment
கடல் போல இருக்கும் வீட்டில், கப்பல் போன்ற பெரிய வார்ட்ரோப். பாரம்பர்ய உடைகளுக்கென்று தனி அலமாரி. அதிலும், வெறும் பட்டுப்புடவைக்கென்று தனி அடுக்கு. அதில் அம்மா கொடுத்த கசவு புடவையை பத்திரமாக வைத்திருந்தார். சாம் அவ்வளவாகப் புடவை உடுத்தமாட்டார் என்பதனால், அதிகம் வாங்குவதில்லையாம். அத்தனையும் பழைய புடவைகள்தானாம். அதேபோல அதிக விலைக்கும் வாங்க மாட்டாராம். அதனால் தேவையில்லாமல் புடவை வாங்கி சேமிப்பதில்லை. ஒரே பிளவுசை வெவ்வேறு புடவையை மேட்ச் செய்து உடுத்தினால், வித்தியாச லுக் கிடைக்கும் என்கிற குறிப்பையும் கொடுக்கிறார் சாம்.
அடுத்தபடியாக புடவை கடையாக மாறியது சம்யுக்தாவின் படுக்கை. தன் திருமண வரவேற்புக்காக மாம்பழ நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவை, பேஸ்டல் பிங்க் நிறத்தில் அழகிய பங்களாதேஷி பட்டுப்புடவை என அடுக்கினார். உண்மையில் இந்த புடவை கலெக்ஷன் எல்லாம் தனிப்பட்ட வகையில் பிரத்தியேகமாகவே இருந்தன.
திருமணத்திற்கு அவர் உடுத்தியிருந்த கனமான பர்ப்புள் நிற புடவை, அழகாகவே இருந்தது. கறுப்பு நிறம்தான் சம்யுக்தாவின் ஃபேவரைட். அதில் புடவை இல்லாமல் இருக்குமா. கற்கள் பதித்திருந்த அந்த கறுப்பு புடவை அவருக்கு மிடுக்கான தோற்றத்தைத் தந்தது. தன் திருமண வரவேற்பு நிகழ்விற்காக கனமான கற்கள் பதித்த லெஹெங்கா சோலியை காட்டவும் மறக்கவில்லை.
இவை எல்லாவற்றையும் விட 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடுத்தியிருந்த புடவையைப் போலவே சம்யுக்தாவிடமும் ஒன்று இருந்தது. இவருக்குப் புடவை என்றாலே நல்லிதான் முதல் சாய்ஸ். பட்டுப்புடவை என்றால் காஞ்சிபுரம். ஃபேன்சி புடவைகள் என்றால் மோச்சி மற்றும் சென்னை சில்க்ஸ். சாம் எப்போதுமே அதிகம் நகைகள் அணியமாட்டார். அதனால், அவரிடம் ஆபரணங்களின் கலெக்ஷன் மிகவும் குறைவாகவே இருந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil