scorecardresearch

ஆரி, திருமணம், அம்மன், குக் வித் கோமாளி – சனம் ஷெட்டி ஓபன் டாக்!

Bigg Boss Sanam Shetty about her journey Tamil News நான் இங்கு இருப்பது எனக்காக மட்டும்தான். வேறு யாருக்காகவும் இல்லை என்பதுதான் கடினமான நேரங்களில் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

Bigg Boss Sanam Shetty about her journey Tamil News
Bigg Boss Sanam Shetty about her journey Tamil News

Bigg Boss Sanam Shetty about her journey Tamil News : தமிழ் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் சனம் ஷெட்டி நடித்திருந்தாலும், மக்கள் மனதைக் கவர்ந்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்தான். தொடக்கத்தில் வெறுப்புகளை சம்பாதித்திருந்தாலும், அவரை பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து சனம், ஆரி, அனிதா கூட்டணி அதிக வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் மக்கள் கேள்விகளுக்கு சனம் ஷெட்டி மனம்விட்டு பதிலளித்தார்.

‘சனம் ஷெட்டியை கேளுங்கள்’ என்கிற ஹேஷ்டேகில் மக்களிடத்திடமிருந்து வந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்த தொகுப்பு இதோ.

திருமணம் எப்போது?

Man proposes God disposes எனும் பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. அது என் வாழ்க்கைக்குக் கச்சிதமாகப் பொருந்தும். ப்ரோபோசல் நடக்கும். ஆனால், அதற்கு பிறகு எதுவும் சரியாக நடந்ததில்லை. ஒருவேளை சரியான நேரம் வரும்போது எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் மற்றவர்கள் உங்களை ஒதுக்கிவைத்தபோது எப்படித் தனி ஆளாக சமாளித்தீர்கள்?

நான் 10 ஆண்டுகளாக வெற்றி என்ற ஒன்றைப் பார்க்காமலேயே இருந்தேன். எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்றுதான் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே சென்றேன். இது எனக்கான மிகப் பெரிய வாய்ப்பு. யாருக்காகவும் இதை உடைத்துவிடக்கூடாது. நான் இங்கு இருப்பது எனக்காக மட்டும்தான். வேறு யாருக்காகவும் இல்லை என்பதுதான் கடினமான நேரங்களில் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதுவே என்னை ஊக்கப்படுத்தியது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்வீர்களா?

ஏன் போகக்கூடாது! வாய்ப்பு வந்தால் கண்டிப்பாகப் பங்கேற்பேன்.

அம்மன் வேடமிட்டு நடிப்பீர்களா?

எல்லா பெண்களுக்குள்ளேயும் ஓர் தெய்வீக குணம் இருக்கிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் ஏற்று நடிப்பேன்.

ஆரி பற்றி ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?

ஆரி பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. ஆனால். ஆரி என்ற ஒரு வார்த்தையில் உண்மை, தன்னம்பிக்கை, கருணை எனப் பல விஷயங்கள் உள்ளன.

எந்த விஷயமில்லாமல் உங்களால் இருக்க முடியாது?

சுதந்திரம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss sanam shetty about her journey tamil news