Bigg Boss Sanam Shetty Skincare Beauty Tips Tamil : பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு விதமான விமர்சனங்களையும் ஆதரவையும் எதிர்கொண்ட சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வரிசையில், சரும பாதுகாப்பு மற்றும் தன் நீண்ட தலைமுடியை எப்படிப் பாதுகாக்கிறார் உள்ளிட்ட பயனுள்ள குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"சருமம் மற்றும் உடல் ஆரோக்கியம் நலம்பெற இரவு வேளையில் நன்கு தூங்குவது நல்லது. காலையில் எழுந்ததும், மைல்டு ஃபேஸ் வாஷ் கொண்டு, முகத்தை நன்கு கழுவவேண்டும். பிறகு, டோனர் உபயோகிப்பேன். சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் டோனர் அவசியம். நான் வைட்டமின் E நிறைந்த டோனர் பயன்படுத்துவேன். கற்றாழை ஜெல் சருமத்திற்கான சிறந்த மாய்ஸ்ச்சரைசர். முடிந்த அளவிற்கு ஹெர்பல் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.
இரவு வேளையிலும் அதே ரொட்டின்தான். ஆனால், க்ரீமி மாய்ஸ்ச்சரைசர் இரவில் பயன்படுத்துவது சிறந்தது. கண்டிப்பாக மேக்-அப் சுத்தம் செய்யாமல் தூங்கவே கூடாது. சருமத்தில் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும். அதேபோல வாரத்திற்கு இரண்டு முறை நல்ல ஸ்க்ரப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
வெளியே செல்லும்போது நிச்சயம் சன்ஸ்க்ரீன் க்ரீம் போட்டுக்கொள்ளுங்கள். குறைவான மேக்-அப் போடுவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். குறைந்த நேரம் சருமத்தில் மேக்-அப் இருப்பதுபோல பார்த்துக்கொள்வதும் அவசியம். முடிந்தவரை ஆர்கானிக் பொருள்களைத் தேர்வுசெய்யுங்கள். தலைமுடிக்கு, வாரத்திற்கு ஒருமுறை மிதமான அளவு தேங்காய் எண்ணெய்யை சுடவைத்து, மசாஜ் செய்யுங்கள். அப்படிதான் நான் செய்கிறேன்.
அதேபோல தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடலை வருத்திக்கொண்டு பண்ணவேண்டும் என்றில்லை. நடைப்பயிற்சி போதுமானது. இப்போது நான் தினசரி ஜிம் போகிறேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், இப்போது விரும்பி செல்கிறேன். உடற்பயிற்சி செய்வதனால் என் மனதளவிலும் நல்ல மாற்றங்களை உணர்கிறேன். உணவிலும் சில கட்டுப்பாடுகள் அவசியம். ராகி, கம்பு, மில்லட்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். நான் வெள்ளை சாதம் உட்கொள்வதைக் குறைத்துக்கொண்டேன்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil