Bigg Boss Sherin Skincare Tips Tamil News : 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் பல தமிழ்நாட்டு இலைகனர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஷெரின், நடுவில் கொஞ்சக் காலம் திரையுலகிலிருந்து காணாமல் போயிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய சுயநலமற்ற இயல்பால் பலரின் மனதையும் கொள்ளையடித்தார். தன் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தும் ஷெரின், அதில் சிலவற்றைப் பகிர்ந்தும் இருக்கிறார்.
Advertisment
Bigg Boss Sherin Latest Photos
"எனக்கு ரொம்பப் பெரிய சரும பராமரிப்பு ரோட்டின் இருக்கிறது. ஃபேஸ் வாஷ், டோனர், சீரம், ஷீட் மாஸ்க், மாய்ஸ்ச்சரைசர் போன்ற பொருள்கள் நிச்சயம் என் ரொட்டினில் இருக்கும். ஓர் பிரத்தியேக அரிசி மாவில் செய்த பவுடரைக்கொண்டுதான் எப்போதும் என் முகத்தைக் கழுவுவேன். இதனை எல்லோரும் பயன்படுத்தலாம். அதேபோல அரிசி ஊறவைத்த தண்ணீரைக்கூட டோனராகப் பயன்படுத்தலாம். அரிசியில் இருக்கும் பண்புகள் சருமத்திற்கு மிகவும் நல்லது. நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்.
Sherin Latest Photoshoot
இரவு தூங்குவதற்கு முன், க்ளென்சிங், ஃபேஸ் வாஷ், டோனர், சீரம், மாய்ஸ்ச்சரைசர், ஐ க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவேன். வெளியே எங்குச் சென்றாலும், ஃபேச வாஷ், டோனர் மற்றும் சீரம் உபயோகிப்பது நல்லது. எனக்குக் கண்டிப்பாக மஸ்காரா மற்றும் லிப்-பாம் தேவைப்படும். மேக் அப் என்று பெரிதாக எதுவும் செய்ய மாட்டேன். எப்போதாவது ஃபவுண்டேஷன் மட்டும் போட்டுக்கொள்வேன்.
Sherin Skincare Secrets
ஷூட்டிங் நேரத்தில் எப்போதுமே மேக் அப் தேவைப்படும் என்பதால், முதல் நாள் இரவு கிளிசரின் முகம் முழுவதும் அப்லை பண்ணிடுவேன். அது முகத்தில் ஒட்டி இருக்கும் அதிகபட்ச கெமிக்கலை எல்லாம் உரித்து எடுத்துவிடும். அதேபோல அடுத்தநாள் போடும் மேக்-அப் முகத்தில் சீராக ஓட்டும்.
Sherin Latest Photos Beauty Tips
அப்படி இல்லையென்றால், முகத்தை நன்கு கழுவி, ஐஸ் கட்டிகளை முகத்தில் வைத்து மிதமான மசாஜ் கொடுப்பேன். இது முகத்தில் ஏற்பதும் வெடிப்புகளை, சீரற்ற சருமம் போன்றவற்றை எல்லாம் கட்டுப்படுத்தும். இதனைத் தொடர்ச்சியாக செய்தால் பலன் நிச்சயம்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil