bigg boss tamil Aajeedh age bigg boss tamil season 4 : தற்போது தொடங்கியுள்ள விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துக் கொண்டுள்ள ஆஜித் காலிக் குறித்த தேடல் இணையத்தில் அதிகமாகியுள்ளது. 2012இல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றாவது சீஸன் டைட்டில் வென்றவர் ஞாபகம் இருக்கிறதா?
பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு கம்பேக் கொடுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு மிக பாப்புலரான ஆஜித் தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியிருக்கிறார். பூவரசம் பீப்பீ படத்தில் மூன்று பாடல்களை அவர் பாடி இருந்தார். அதற்கு பிறகு சில படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமா துறையில் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாத அளவுக்கு இருந்தார். இதன் பிறகு தான் தற்போது பிக் பாஸ் மூலமாக சின்னத்திரைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
Advertisment
Advertisements
உண்மையிலேயே ஆஜித் காலீக்கிற்கு என்ன தான் வயது என ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்த நிலையில் தற்போது அதைப் பற்றி அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஆஜித்திற்கு 18 வயது தான் ஆகிறது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் நுழைவதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆஜித் 18 வயதிலேயே உள்ளே போட்டியாளராக நுழைந்திருக்கிறார். அது ஒரு சிறந்த விஷயம் இல்லையா. அது சரி, ஆஜித் மைண்டில் என்ன கேம் ட்ராக் இருக்கிறது என்பது இன்னும் யாருக்கும் விளங்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news