பல முறை மரணம் என்ற வதந்தி… புன்னகை மன்னன் முத்தக்காட்சி சர்ச்சை! பிக் பாஸ் ரேகா எமோஷ்னல் பக்கம்!

இளையராஜாவின் இசையில் மட்டும் 40 படங்கள் செய்துள்ளேன் என்று பெருமிதம் கொண்டார்.

bigg boss tamil rekha bigg boss rekha daughter bigg boss season 4
Bigg Boss 4 Tamil Rekha

bigg boss tamil rekha bigg boss rekha daughter bigg boss season 4 : விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக சக்கைபோடு போட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மூன்று நாட்கள் முன்பு தொடங்கியது. வழக்கம் போல இந்த ஆண்டும் உலகநாயகன் கமல் ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சி பிரபலம் மற்றும் நடிகர் ரியோ ராஜ், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ரேகா போன்ற 16 போட்டியாளர்களுடன் இந்த ஆண்டு பிக் பாஸ் அமோகமாக தொடங்கியுள்ளது.

இதில் மூத்த நடிகை என்றால் அது ரேகா தான். கடலோர கவிதைகள் ரேகா என்றால் தெரியாதவர்களே இல்லை. தன்னுடைய முதல் சினிமா அறிமுகம் குறித்தும் ரேகா பிக் பாஸில் பேசி இருந்தார்.”சினிமாவில் எப்படியாவது ஒரு படம் நடித்து சாதித்துவிட வேண்டும் என்று எண்ணி இருந்த சமயத்தில் என்னுடைய குரு கலைமணி சார் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். சினிமாவைப் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு, பாரதிராஜா யார் என்று கூட முதலில் தெரியவில்லை.

இயக்குனர் பாரதிராஜா முதலில் என்னிடம், நான் பார்த்த படங்கள் பற்றி கூறும்படி கேட்டார். ஆனால் நான் படங்கள் ஏதும் பார்த்ததில்லை என்று கூறிவிட்டேன். அதைத் தொடர்ந்து உனக்கு இளையராஜா தெரியுமா என்று கேட்டார். அதற்கு எனக்கு இளையராஜாவும் தெரியாது என்றும், இந்த சினிமா குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் பதிலளித்தேன்.

அதைத் தொடர்ந்து அவர் என்னிடம் எறும்பு போகிறதா பார் என்று கூறினார். அதற்கு நான் எரும்பு ஏதும் செல்லவில்லை என்றேன். உடனே அவர் என்னிடம் எறும்பு போகிற மாதிரி பார்க்க சொன்னார். நானும் அவ்வாறு பார்த்தேன். அதையடுத்து பாரதிராஜா என்னிடம் நாளை மறுநாள் நாம் விசாகப்பட்டினம் செல்ல இருக்கிறோம் என்று கூறி என்னிடம் ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்தார்.அவருடன் ஒன்றும் தெரியாமலேயே சினிமாவில் முதல் படம் நடித்து முடித்தேன்” என்றார்.

ரேகா இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.சைஞானி இளையராஜாவின் இசையில் மட்டும் 40 படங்கள். இருந்த போதும் சினிமா துறையில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்றும், தனது வளர்ச்சிக்கு யாரும் உதவியது இல்லை என்றும் ரேகா தெரிவித்திருந்தார்.

பலமுறை சமூகவலைத்தளங்களில் ரேகா இறந்து விட்டதாக போலியான வதந்திகள் வெளிவந்து பரவியுள்ளன. இதுக் குறித்து ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரேகா, “100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். இபோது விருது வாங்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் எனக்கு பாடை கட்ட பார்கிறார்கள்” என உருக்கமாக கூறியிருந்தார்.

புன்னகை மன்னன் படம் பற்றிய அறிமுகமே வேண்டாம். இந்த படத்தில் ரேகா -கமல் இருவரும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பார்கள். அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால். இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளே இதுதான். கமலும், ரேகாவும் ஆனந்தமாக தற்கொலை செய்து கொள்ள தயார் ஆவர்கள். அப்போது முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கும். இந்த காட்சியை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், கமல்ஹாசன் இருவரும் ரேகாவுக்கு தெரியாமலே எடுத்துள்ளனர்.

இதுக்குறித்து ரேகா,அளித்த பேட்டி சில மாதங்களுக்கு முன்பு வைரலானது. ரேகா, அனுமதி இல்லாமல் அந்த காட்சி எடுக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுக் குறித்து முழுமையான விளக்த்தையும் ரேகா அளித்திருந்தார். அந்த நிகழ்வை கடந்து வந்து விட்டதாகவும் கூறி இருந்தார். ரேகாவுக்கு அவரின் அப்பா என்றால் உயிர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil rekha bigg boss rekha daughter bigg boss season 4 rekha family biggoss hotstar

Next Story
காய்கறி இல்லாமல் சத்தான சாம்பார்: செம்ம டேஸ்ட்டா இருக்கும்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com