bigg boss tamil shivani shivanai narayanan instagram
bigg boss tamil shivani shivanai narayanan instagram : விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்ட பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் ஷிவானி நாராயணன். இவரின் இன்ஸ்டாவுக்கு தனி கூட்டம் உண்டு. இவரின் டான்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். இண்டர்நெட் சென்சேஷன் ஷிவானி இப்ப பிக் பாஸ் 4 சீசனில்.
Advertisment
யார் இந்த ஷிவானி பார்க்கலாமா?
இவ்வளவு குறுகிய காலத்திலேயே லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு அமைந்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியம் தான்.
அதற்கு காரணமே, ஷிவானியின் அழகு மட்டுமில்லை ஆக்டிங் அண்ட் டான்ஸ் ஆடும் திறமையும் தான். ஷிவானியின் டிக் டாக், டப்மேஷ்கள் இணையத்தில் படு வைரல். விஜய் டிவி சீரியலான கடைக்குட்டி சிங்கம் தொடரில் அசீம் – ஷிவானியின் ஜோடி செம்ம ஹிட் அடித்தது. ஆனால் அந்த சீரியல் திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது.
Advertisment
Advertisements
இரட்டை ரோஜா’ என்ற சீரியலில், அனு, அபி என இரட்டை வேடங்களில் நடித்தார் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோ. அவர் எந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டாலும் லைக்ஸ்கள் அள்ளும். சமீபத்தில் கரீனாகபூரின் டான்ஸை அப்படியே ஆடி அசத்தி இருந்தார். அதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார் ஷிவானி . அதும் ஹிட்ஸ் லைக் அண்ட் ஷேர் தான்.
ஷிவானியின் சொந்த ஊர் சாத்தூர்.-ம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ஷிவானி, அதன் பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார். ஷிவானி சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டிக் டாக், டப்மேஷ் செய்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து தான் வாய்ப்பே அவருக்கு வந்ததாம்.
ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்தா ஷிவானி டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
போன பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ் ஞாபகம் இருக்கிறதா? இவர், தனது இரண்டாவது படத்திலும் கையெழுத்திட்டுள்ளார் . இதனை அஞ்சனா அலிகான் இயக்குகிறார். இவர் நானி, நித்யா மேனன் மற்றும் பிந்து மாதவி நடித்த ‘வெப்பம்’ என்ற ஹிட் படத்தை இயக்கியவர். இதில் ‘பாகல் நிலாவு’ சீரியல் புகழ் பிரபல தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் சென்று டைட்டில் அடித்த முகென், கரண்ட் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானி அட புரமோஷனுக்கு சூப்பரா இருக்குமே!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil