இது பீரோ இல்ல… பாத்ரூம்; கனவு இல்லத்தில் இப்படி கட்டியது ஏன்? பிக்பாஸ் தாமரை எமோஷ்னல்

இவ்ளோ நாள் ரொம்ப கஷ்டப்பட்டே வாழ்ந்துட்டோம். நிறைய வாடகை வீடு மாறுனோம். இதுக்கு அப்புறமாவது நம்ம நினைச்ச மாதிரி வாழணும் நினைச்சு நானும், என் வீட்டுக்காரரும் ஐடியா பண்ணி வச்ச பாத்ரூம் தான் இது...

இவ்ளோ நாள் ரொம்ப கஷ்டப்பட்டே வாழ்ந்துட்டோம். நிறைய வாடகை வீடு மாறுனோம். இதுக்கு அப்புறமாவது நம்ம நினைச்ச மாதிரி வாழணும் நினைச்சு நானும், என் வீட்டுக்காரரும் ஐடியா பண்ணி வச்ச பாத்ரூம் தான் இது...

author-image
WebDesk
New Update
Bigg Boss Thamarai

Bigg Boss Thamarai

தமிழ் பாரம்பரிய கலையான நாட்டுப்புற கலையை தனது வாழ்வாக கொண்டவர் தாமரை. நாட்டுப்புற பாடகியாகவும், நடனக்கலைஞராகவும் பல மேடைகளில் மிளிர்ந்திருக்கிறார். தனது கலையின் மூலம் தமிழகம் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் நம் கலாசாரத்தை பரப்பியுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில், ஒரு சாமானியராக கலந்துகொண்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisment

சமீபத்தில் கலட்டா தமிழ் யூடியூப் சேனலில் வெளியான அவரது ஹோம் டூர் வீடியோ பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு காரணமே அவர் வீட்டிலுள்ள பாத்ரூம் தான். 

நீங்களே அந்த வீடியோவ பாருங்க!

”இது நீங்க பீரோ நினைப்பீங்க. ஆனா இது எங்க வீட்டு பாத்ரூம். யாரும் கண்டுபிடிக்க கூடாது, தெரியக் கூடாதுனு நினைச்சு இப்படி வச்சிருக்கோம். இவ்ளோ நாள் ரொம்ப கஷ்டப்பட்டே வாழ்ந்துட்டோம். நிறைய வாடகை வீடு மாறுனோம். இதுக்கு அப்புறமாவது நம்ம நினைச்ச மாதிரி வாழணும் நினைச்சு நானும், என் வீட்டுக்காரரும் ஐடியா பண்ணி வச்ச பாத்ரூம் தான் இது” என்று கூறுகிறார் தாமரை. 

Advertisment
Advertisements

கனவு இல்லம் என்றாலே நம் நினைவுக்கு வருவது விசாலமான வரவேற்பறை, ரம்மியமான படுக்கையறை, அல்லது நேர்த்தியான சமையலறை தான். ஆனால், ஒரு வீட்டின் உண்மையான அமைதியையும், ஆடம்பரத்தையும் உணர்த்துவது அதன் குளியலறை. ஆம், ஒருநாள் முழுவதும் நாம் சந்திக்கும் சவால்களுக்குப் பிறகு, நம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இடம் அது. இந்த இடத்தை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைப்பது, மன அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தரும். அந்தவகையில், தாமரை தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களை எப்படி புத்திசாலித்தனமாகச் சமாளித்து, ஒரு படைப்புத்திறன் மிக்க வாழ்க்கையை வாழ்கிறார் என்பதை இந்த வீடியோ அழகாக எடுத்துக்காட்டுகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: