சின்னத்திரை மூலம் கிடைத்த நிகழ்ச்சி… டாக்டர் பட்டம் புகழ்! பிக் பாஸ் வேல்முருகன் ஷேரிங்

ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அழைப்பு தான் இவரின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது

bigg boss velmurugan bigg boss tamil singer velmurugan
Bigg boss 4 Tamil Velmurugan

bigg boss velmurugan bigg boss tamil singer velmurugan : `விஜய் டிவியில் பிக் பாஸ். இதில் இருக்கும் 16 போட்டியாளர்களில் பாடகர் வேல்முருகனும் ஒருவர். இவரை பற்றி சுவாரசியங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

வேல்முருகன் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருகிறார். மேலும் இவர் நாட்டுப்புற பாடல்களால் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராமிய பாடகர், சினிமா பின்னணி பாடகர், மரபு இசை கலைஞர், நாட்டுப்புற நாயகன் என பல விருதுகள், பாடல் உருவாக்கத்தில் தோன்றிய முதல் பாடகர் , கின்னஸ்சாதனை படைப்பாளி, நடிகர் என பல்வேறு முகங்களை கொண்ட பாடகர் வேல்முருகன். இவர் விருதாச்சலத்தில் உள்ள “முதனை” கிராமத்தில், 1980 ம் வருடம் மார்ச் 3 ல் நடுத்தர இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை விவசாய பின்புலத்தை சார்ந்தவர்..

” குழந்தை பருவத்தில் இருந்தே, பாடல் மற்றும் இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் ஐடிஐ படித்து முடித்த பின், இசையின் மீதிருந்த ஆர்வத்தால் அடையாறில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பின்னர் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றார், அப்போது தற்செயலாக ஒரு பாடலை பாட , அந்த நிகழ்ச்சியை பார்த்த இயக்குனர் ” சசிகுமார்” இவரை பற்றி இசையமைப்பாளர் “ஜேம்ஸ் வசந்திடம்” கூறியுள்ளார். இப்படியாக இவருக்கான சினிமா வாய்ப்பு 2008 ல் சுப்பிரமணியபுரம் படத்தில் ” மதுர குலுங்க” என்ற பாடலுக்கு கிடைத்தது. பின்னர் நாடோடிகள் படத்தில் ” ஆடுங்கடா மச்சான் ” பாடல் 2009 ல் பாடினார். கடைசியாக இவர் அசுரன் படத்தில் “கத்தரி பூவழகி ” என்ற பாடலை 2019 ல் பாடியுள்ளார். இவர் இதுவரை 350 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் இந்திய ராணுவம் தொடர்பாக எழுதிய பாடலுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவரிடம் மரபு இசை நாயகன் விருது. டாக்டர் அப்துல் கலாம் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து நாட்டுப்புற நாயகன் விருது.

2020ம் ஆண்டிற்கான பெரியார் விருது 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின் கலைமாமணி விருது ( 2019ல் முதல்வர் பழனிசாமியால் வழங்கப்பட்டது) விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியை தொடர்ந்து கலைமாமணி விருது பெறும் 3வது கிராமிய பாடகர் இவர் தான்) 2020 பொங்கல் விழாவில், சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் விருது போன்றவற்றை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு அமெரிக்கன் பல்கலைகழகம் உட்பட இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

மேலும் ஒயிலாட்டக்குழுவினர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பாடல் எழுதியேதோடு மட்டுமல்லாது 1418 நடனக்கலைஞர்களுடன் இணைந்து நடனத்தோடு, பாடியதை பாராட்டி 2019 ல் கின்னஸ் விருது வழங்கப்பட்டது. வேல்முருகன் சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2017 ல் அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் பல விருதுகளை பெற்றிருந்தாலும் இவர் அம்மாவை பற்றி எழுதிய பாடலுக்காக கிடைத்த கவுரவ டாக்டர் பட்டத்தையே பெருமையாக சொல்கிறார். மேலும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் அழைப்பு தான் இவரின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது என சிலாகித்து கொள்ளும் இவர். அதிகமாக ஜுவி.பிரகாஷ் இசையில் தான் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

source: facebook

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss velmurugan bigg boss tamil singer velmurugan vijay tv bigg boss velmurugan bb

Next Story
ஆனியன் சமோசா… வீட்ல செஞ்சாலும் டேஸ்ட் மாறாது!onion samosa recipe onion samosa recipe in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com