Bigg Boss Vijayalakshmi Hair Care Tips Tamil New : தலைபராமரிப்பு என்பது இந்தக் காலத்தில் மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. ஆனால், ஸ்கால்ப் ஸ்க்ரப்பிங் எனும் எளிய வழிமுறை மூலம் நம் தலைமுடியை நன்கு பராமரிக்கலாம் என்று பிக் பாஸ் புகழ் விஜயலக்ஷ்மி தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார். முடி உதிர்வை முற்றிலும் குறைக்கும் ஸ்கால்ப் ஸ்க்ரப்பிங் என்றால் என்ன? அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்?
Advertisment
"ஸ்கால்ப் ஸ்க்ரப்பிங் என்பதை நம் நாட்டில் ஏனோ கண்டுகொள்வதே இல்லை. ஆனால், நம் தலைமுடியைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமான ஒன்று. நம் தலைமுடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளரவேண்டுமென்றால், வேர் வலிமை மிக்கதாக இருக்கவேண்டும். நாம் உபயோகிக்கும் சீரம், ஸ்ப்ரே, கண்டிஷனர், வெளியில் செல்லும்போது படியும் அழுக்கு, பயன்படுத்தும் எண்ணெய், இறந்த செல்கள் என அத்தனையும் ஸ்கால்ப்பில் படிந்துகொள்ளும்.
இது அதிகமாகப் படிந்தால், முடி வளராது, வலுவிழக்கும், அதிகமாகக் கொட்டும். முக்கியமாகப் பொடுகு வரும். இதனை ஸ்கால்ப் ஸ்க்ரப்பிங் முறைகேடு சரிசெய்யலாம். நான் என்னுடைய ஸ்கால்ப் ஸ்க்ரப்பிங் முறைக்கு காபி ஸ்கால்ப் ஸ்க்ரப்பர் பயன்படுத்துகிறேன். காபி, தலைமுடிக்குச் சிறந்த உணவு என்று சொல்லலாம். ரத்த ஓட்டத்தை சீராக்கி, தலைமுடிக்கு தேவையான சத்துகளை காபி ஸ்க்ரப்பர் கொடுக்கிறது.
முதலில் தலையை நனைத்துவிட்டு, பிறகு உங்கள் ஸ்கால்ப் ஸ்க்ரப்பரை முடி வேரில் அப்லை செய்து நன்கு மசாஜ் கொடுங்கள். சுமார் 2 நிமிடங்களாவது விடாமல் மசாஜ் செய்யவேண்டும். இப்படி செய்தால்தான், வேரில் படிந்திருக்கும் அழுக்கு எல்லாமே சுத்தமாகும். பிறகு ஷாம்பூ கொண்டு முடியை அலசலாம். அவ்வளவுதான் பட்டுபோன்ற கூந்தல் அதிலும் சுத்தமான ஆரோக்கியமான கூந்தல் உங்களுக்கு சொந்தம். சின்ன ஸ்க்ரப் ஸ்கால்பிங்தான் ஆனால், பயன்கள் அதிகம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil