scorecardresearch

அடர்த்தியான முடி வளர அரிசி கழுவிய தண்ணீர் போதும் – பிக் பாஸ் விஜி லாக்டவுன் ஹேர்கேர் டிப்ஸ்!

Bigg Boss Vijayalakshmi Haircare Tips சூரிய ஒளியிலிருந்தும் மற்ற ரசாயனம் மற்றும் மாசிலிருந்தும் முடியைப் பாதுகாப்பது அவசியம்.

Bigg Boss Vijayalakshmi Haircare Tips Viral Video Tamil
Bigg Boss Vijayalakshmi Haircare Tips Viral Video Tamil

Bigg Boss Vijayalakshmi Haircare Tips Viral Video Tamil : சென்னை 28 திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயலக்ஷ்மி, தொடர்ந்து சில ஹிட் படங்களில் நடித்தார். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில்வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார். அன்றிலிருந்து இன்றுவரை சமூக வலைத்தளங்கள் வழியே மக்களோடு இணைப்பிலேயே இருக்கிறார்.

அந்த வரிடையில், இந்த லாக்டவுனில் வீட்டிலிருந்தபடியே தலைமுடியை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்கிற காணொளியை தன்னுடைய  யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்திருக்கிறார் விஜி. இது லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது. அப்படி என்னவெல்லாம் தலைமுடிக்கான டிப்ஸ் கொடுத்தார் என்பதைப் பார்க்கலாம்.

பள்ளி படித்துக்கொண்டிருக்கும் காலத்தில், தன்னோடு கூட படித்த சக தோழி ஒருவர், விஜியின் பொலிவற்ற குறைவான தலைமுடியைப் பார்த்துக் கிண்டல் செய்துவிட்டாராம். அன்றிலிருந்து நீண்ட தலைமுடி வளர்ப்பது இவருடைய லட்சியமாகவே மாறிப்போனதாம். அப்படி கேலி செய்த அனைவர்க்கும், இப்போது சவால் விடுகிறார் விஜி. இப்படிதான் இந்த காணொளி ஆரம்பமாகிறது!

அடுத்ததாகத் தலைமுடி பாதுகாப்பு சீக்ரெட்டுகளை அடுக்குகிறார். “தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்யைத் தவிரச் சிறந்த மருந்து எதுவுமில்லை. அதனோடு நான் 2 அல்லது 3 வைட்டமின் ஐ கேப்சியூல்களை சேர்த்து, மிதமாக சுடவைத்து, அதனை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்வேன். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றால், வெறுமனே எண்ணெய்யை முடியில் ஊற்றிக் குளிப்பதல்ல. நீண்ட ஆரோக்கியமான தலைமுடிக்கு நன்கு மசாஜ் செய்யவேண்டும். அதிலும் வைட்டமின் E கேப்சியூலில் ஆன்ட்டி-ஆக்சிடென்ட் ப்ராப்பர்டி இருப்பதால், தலைமுடி சீராக வளரும்.

அடுத்தபடியாக அரிசி தண்ணீர் ரின்ஸ். பெயரைக் கேட்டதும் பயந்துவிடாதீர்கள். நாம் அரிசி கழுவிய நீரை, 24 மணிநேரம் ஊறவைத்து, புளித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த நீரை, ஷாம்பூ பயன்படுத்தி முடியை அலசியபிறகு கண்டிஷனராக பயன்படுத்தலாம். அல்லது, தலைமுடி வேர் வரை படரும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கலாம். எக்காரணத்திற்கும் ஷாம்பூ பயன்படுத்தாதீர்கள். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் நிச்சயம் உங்கள் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

எப்போதுமே தலை குளித்தால், எந்தவிதமான ட்ரையரும் உபயோகிக்கக் கூடாது. இது முடியை வலுவிழக்க வைக்கும். அதற்கு பதிலாக, தலை குளித்தவுடன், தலையில் துண்டை கட்டி சிறிது நேரம் விட்டு, பிறகு இயற்கையாகவே காயவிடுங்கள். இப்படிச் செய்தால் நிச்சயம் முடி உதிர்வு பிரச்சனை குறையும். அதேபோல, சூரிய ஒளியிலிருந்தும் மற்ற ரசாயனம் மற்றும் மாசிலிருந்தும் முடியைப் பாதுகாப்பது அவசியம். அதற்குத் தலைமுடி மாஸ்க் உபயோகிக்கலாம்.

மேலும், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரவர்களுக்கு தனித்தனியே துண்டு மற்றும் சீப்பு வைத்துக்கொள்வது முக்கியம். அதிலும், தலைக்கு மட்டும் தனியே துண்டு வைத்துக்கொள்ளலாம். இரவு தூங்கப்போவதற்கு முன்பு, நல்ல ப்ரஷ் வைத்து, தாலியின் முன்பக்கம், பின்பக்கம் என நன்கு மசாஜ் செய்து தூங்கினால், நிச்சயம் அடர்த்தியான தலைமுடி கியாரண்டி. இதனை விடாமல் கடைப்பிடிப்பதுதான் இதில் இருக்கும் சவால்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss vijayalakshmi haircare tips viral video tamil