கேமரா, உடை, நடை எல்லாமே டாப் க்ளாஸ் – வெரைட்டி காட்டும் பிக் பாஸ் விஜி யூடியூப் சேனல்

Bigg Boss Vijayalakshmi Youtube Channel பக்காவான கேமரா ஆங்கில், பின்னணி இசை, உடை என அத்தனையும் பார்ப்பவர்களை ஈர்க்கும் விதமாகவே இருக்கிறது.

Bigg Boss Vijayalakshmi Youtube Channel Tamil
Bigg Boss Vijayalakshmi Youtube Channel Tamil

Bigg Boss Vijayalakshmi Youtube Channel Tamil : இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளும் நடிகையுமான விஜயலக்ஷ்மி, சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து, ஹிட் கொடுத்து ராசியான நடிகை என்ற பெயர் வாங்கியவர். இயக்குநர் ஃபெரோஸ்ஸை திருமணம் செய்து, தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். நீண்ட கால திரையுலக இடைவெளிக்குப் பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். தற்போது தனக்கென  யூடியூப் சேனல் தொடங்கி, பல சுவாரசிய படைப்புக்களைப் பதிவேற்றி வருகிறார்.

Bigg Boss Viji

9 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இவருடைய Its VG சேனலில், தன்னுடைய ஒருநாள் வாழ்க்கைமுறை, கிச்சன் டூர், அழகுக் குறிப்புகள், தன் சகோதரிகளுடனான அவுட்டிங் என பல்வேறு வகையான சுவாரசிய வீடியோக்களை பதிவு செய்திருக்கிறார்.  இதில் பல வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் வந்திருக்கிறது.

வழக்கமாக பெரும்பாலான பிரபலங்கள் அழகுக் குறிப்புகள் அல்லது ஷூட்டிங் ஸ்பாட் Vlog போன்றவற்றைத்தான் பதிவேற்றுவார்கள். ஆனால், விஜியின் ஆர்வமோ வேறு. இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்றால் அது கார் ஓட்டுவதுதான். தன்னிடம் இருக்கும் கார்களை பற்றியும், அதன் அம்சங்களை பற்றியும் தன்னுடைய சேனலில் விரிவாகக் கூறியது மட்டுமல்லாமல், ஸ்டைலிஷாக ஒட்டியும் காட்டியிருக்கிறார். பக்காவான கேமரா ஆங்கில், பின்னணி இசை, உடை என அத்தனையும் பார்ப்பவர்களை ஈர்க்கும் விதமாகவே இருக்கிறது.

Viji, Kani, Niranjani

சமீபத்தில் தன் தங்கையும் ஆடை வடிவமைப்பாளருமான நிரஞ்சனியின் திருமண நிகழ்வையும் தன்னுடைய சேனலில் பதிவேற்றி ட்ரெண்டாக்கினார் விஜி. அதுமட்டுமின்றி, திருமணத்திற்கான பர்ச்சேஸ் அட்ராசிட்டிகள், அவருடைய ஜிம் திறந்தபோது எடுக்கப்பட்ட காணொளி என அத்தனையும் ஹிட். அதாவது மில்லியன் கணக்கான வியூஸ்களை பெற்றிருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றியாளரான கனி, விஜியின் அக்காதான். கனியின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து எடுக்கப்பட்ட வீடியோ இதுவரை 2.3 மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது. அதைவிட விஜி வீட்டிலிருக்கும் ஃப்ரிட்ஜை சுற்றிக்காட்டி 2.5 மில்லியன் வியூஸ்களை பெற்று, இவருடைய சேனலின் டாப் இடத்தைப் பிடித்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss vijayalakshmi youtube channel tamil

Next Story
வெல்லம், லெமன்… காலையில் வெறும் வயிற்றில் இதை குடிச்சுப் பாருங்க!Weight loss drink Jaggery and Lemon Tamil News: What to drink to loose weight
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com