biggboss julie instagram maria juliana bigg boss julie : ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக கொண்டாடப்பட்டு, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே ”யாருடா இந்த பொண்னு” னு கேட்க வைத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் குறிப்பாக ஓவியாவுக்கு எதிராக அவர் பேசியவை, ஜூலியின் நன்மதிப்பைக் குறைத்துவிட்டது.
Advertisment
செவிலியராக இருந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் ஜூலியின் ஆசை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட அதை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல், ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் ஜூலி. அதன் பின்பு அவரை தேடி வந்த வாய்ப்பு தான் அம்மன் தாயி.
இந்த படத்தில் ஜூலி அம்மனாக நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் அம்மன் தாயில் ரிலீஸூக்காக வெயிட்டிங். இதற்கிடையில் ஜூலி கல்லூரி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், கடை திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.
Advertisment
Advertisements
சமீபத்தில் பிரைடல் ஃபோட்டோ ஷூட்டில் கலக்கிய ஜூலி இப்போது அல்ட்ரா மார்டனில் கலக்குகிறார். அவரின் புகைப்படங்கள் அனைத்தும் இப்போது ட்விட்டர் வைரல்.
ஜூலியின் இந்த ஃபோட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள், ஷாக் ஆகியுள்ளனர். மேக் அப், ட்ரெஸிங் சென்ஸ் என ஜூலியின் இந்த மாற்றம் வியக்க வைத்துள்ளது. கூடவே வழக்கம் போல் விமர்சனங்களும். கோலிவுட்டில் கதாநாயகி ரோலுக்கு தான் ஜூலியின் இந்த ஃபோட்டோ ஷூட் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஜூலியின் இந்த ஃபோட்டோ ஷூட் பார்த்து உங்களின் ரியாக்ஷன் என்ன?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news