கடலை மாவு, மஞ்சள், தயிர்.. இதயத்தைத் திருடாதே பிந்துவின் பியூட்டி அலெர்ட்ஸ்!

Bindhu Hima Beauty skincare tips பாலுக்கு பதிலாக ஐஸ் கட்டிகளைக்கூடப் பயன்படுத்தலாம்.

Bindhu Hima
Bindhu Hima Beauty tips skincare and hair tips idhayathai thirudadhey

கலர்ஸ் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ‘இதயத்தை திருடாதே’ தொடர் மூலம் பலரின் இதயத்தைத் திருடி வரும் பிந்து ஹீமாவின் எளிமையான சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்களை பகிர்ந்திருக்கிறார்.

Bindhu Hima Beauty Tips

“காலையில் எழுந்ததும் காய்ச்சாத பாலில் காட்டன் பந்துகளை நனைத்து முகத்தில் நன்கு  தேய்த்து முகத்தை சுத்தம் செய்யலாம். பாலுக்கு பதிலாக ஐஸ் கட்டிகளைக்கூடப் பயன்படுத்தலாம். பளபளக்கும் சருமத்திற்குக் கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து முகம், கழுத்து, கை, கால்களில் அப்லை செய்து, நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை வாரத்திற்கு இருமுறை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

Bindhu Hima Skincare Tips

தலைமுடி பராமரிப்புப் பொறுத்த வரையில் பாதாம் எண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய்யை முடியின் வேர் வரை செல்கிற அளவிற்கு தேய்த்து, சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கவேண்டும். இதைவிட சிறந்த கூந்தல் பராமரிப்பு டிப் எதுவுமேயில்லை.

Bindhu Hima Hair Growth Tips

மேக்-அப் பொறுத்தவரை மாய்ஸ்ச்சரைசர், ப்ரைமர் மற்றும் ஃபவுண்டேஷன் ஆகியவை தேர்வு செய்வதற்கு முன், உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற பொருள்களா என்பதை சரிசெய்த பிறகு மட்டுமே வாங்கவேண்டும். தூங்குவதற்கு முன்பு, கண்டிப்பாக மேக்-அப் சுத்தம் செய்யவேண்டும். அதற்குத் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது சிறந்தது” என்று நிறைவு செய்கிறார் பிந்து.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bindhu hima beauty tips skincare and hair tips idhayathai thirudadhey

Next Story
ரத்த அழுத்தம் சீர் செய்வது முதல் வலி நிவாரணி வரை… சின்ன கடுகு; பெரிய பயன்கள்!Controlling blood pressure skin infection benefits mustard seeds Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express