இசையின் இனிமை, நகைச்சுவையின் கலகலப்பு, அன்பின் ஆழம்... இவை அனைத்தையும் ஒருசேரக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம் என்றால், நம் கண்முன் சட்டென்று வருவது பாடகி சிவாங்கி கிருஷ்ணகுமார் குடும்பம்தான்.
Advertisment
சிவாங்கியின் தாய் பின்னி கிருஷ்ணகுமார், கர்நாடக இசைக் கலைஞராகவும், பின்னணிப் பாடகராகவும் கலையுலகில் பல்லாண்டுகளாகப் பயணம் செய்து கொண்டிருப்பவர். பின்னியின் கணவர் டாக்டர். கே. கிருஷ்ணகுமார். இவரும் ஒரு புகழ்பெற்ற பாடகர். இந்த தம்பதியினர் இருவரும் இணைந்து 150-க்கும் மேற்பட்ட மேடைகளில் கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தியுள்ளனர். பினி கிருஷ்ணகுமாரின் குரல் மட்டும் இனிமையில்லை, அவரது நகை ரசனையும் தனித்துவமானது. பல்வேறு மாநிலங்களின் கலாசாரப் பெருமையைச் சுமந்து நிற்கும் நகைகளைச் சேகரிப்பதில் அவருக்கு அலாதியான பிரியம் உண்டு. பஞ்சாப், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மற்றும் கேரளா என இந்தியாவின் பல மாநிலங்களில் பினி பயணித்து, அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய நகைகளைச் சேகரித்திருக்கிறார். குறிப்பாக, கேரளாவின் பாரம்பரியமான புலிநாக மாலை மற்றும் நாகபணமாலை ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்தமானவை.
மிஸ் வொவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பின்னி தனது ஜூவல்லரி கலெக்ஷன் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
Advertisements
”ஜிமிக்கிகள்னா எனக்கு ரொம்ப இஷ்டம். மூன்று அடுக்கு ஜிமிக்கி மாதிரியான கலெக்ஷன்ஸ் என்கிட்ட நிறைய இருக்கு. என்னோட ஜிமிக்கிகள் பெரும்பாலும் நான் கண்காட்சிகள்ல வாங்குறதுதான். பல வருடங்கள் தேடி அலைஞ்சு வாங்குன ஜிமிக்கிகள் கூட என்கிட்ட இருக்கு. சில நேரங்களில் நான் சாதாரண சின்ன ஸ்டட்ஸை மூக்குத்தியா கூட போடுவேன்.
சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை, கருப்புன்னு எல்லா கலர்லயும் நான் நகைகள் வச்சிருக்கேன். குறிப்பா, நீல நிற புலிநகம் டெம்பிள் ஆபரண செட்களில் பயன்படுத்துவாங்க. இது சில்வர் பேஸ்ல இருக்கும். இந்த மாதிரியான நகைகள் பெரும்பாலும் கண்காட்சிகள்லதான் கிடைக்கும். நிறைய டான்ஸர்கள் இந்த நகைகளை விரும்பி வாங்குவாங்க. நானும் அப்படித்தான், கண்காட்சிகளுக்குப் போனா கண்டிப்பா ஏதாவது வாங்குவேன்.
எனக்கு கச்சேரிகளுக்கு போகும்போது ரொம்ப சிம்பிளா இருக்கிற மாதிரி நகைகளைத்தான் போடுவேன். ஆனால், படப்பிடிப்பு, விழாக்கள்னு வரும்போது கொஞ்சம் பெரிய நகைகளைத் தேர்வு செய்வேன். சிவாங்கி கல்யாணாத்துல என்னோட களமன்னி, இளக்கத்தாளி நகைகளை போடணும்னு ஆசைப்படுறா.
எனக்கு தங்கம் நகைகள் மேல பெரிய ஈர்ப்பு இல்லை. அதுவும் எங்க வீட்டில் நிறைய இருக்கு. ஆனால், அவற்றை நான் அணிவதில்லை. பயணம் செய்யும்போது பயம் இல்லாமல் இருக்கவும், தலவலி இல்லாமல் இருக்கவும் ஆர்ட்டிஃபிஷியல் நகைகளை எடுத்துட்டுப் போயிடுவேன். இது எனக்கு ரொம்ப சுலபமா இருக்கு, என பாடகி பின்னி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.