டெய்லி தேங்காய் எண்ணெய் வச்சு தலை வாஷ் பண்ணனும்... சிவாங்கி அம்மா சொல்லும் பியூட்டி டிப்ஸ்!
சிவாங்கியின் தாயார் பின்னி கிருஷ்ணகுமார், தான் நாள்தோறும் பின்பற்றும் பியூட்டி டிப்ஸை தெரிவித்துள்ளார். குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் இதனை பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தலைக்கு சரியாக எண்ணெய் தேய்ப்பது இல்லை. இதேபோல், எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு பழக்கத்தையும் நிறைய மக்கள் பின்பற்றுவது இல்லை. உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்று பல வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
ஆனால், இளம்தலைமுறையினர் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் ஆர்வம் காண்பிக்காமல் இருக்கின்றனர். இந்த சூழலில் சிவாங்கியின் தாயார் பின்னி கிருஷ்ணகுமார், தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் அவசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாள்தோறும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என சிவாங்கியின் தாயார் பின்னி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு குளிக்கும் போது தேங்காய் எண்ணெய் நம் முகத்தில் இறங்கும். இது, முகத்தில் ஒரு பொலிவை கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் இதனை பின்பற்றுவதாக பின்னி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு, தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தான் அத்தகைய பொலிவு கேரள பெண்களிடம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
ஆனால், இப்போதைய சூழலில் தலைக்கு எண்ணெய் வைத்தால் அதனை ஷம்பு மற்றும் கண்டிஷனர் போன்ற பொருட்களை கொண்டு அகற்றி விடுகின்றனர். இவ்வாறு செய்யக் கூடாது என அவர் அறிவுறுத்துகிறார். மேலும், முடிய உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேங்காய் எண்ணெய்யின் பசை இருக்கும் போது தான் ஒரு வித பொலிவு இருக்கும் என்று பின்னி கிருஷ்ணகுமார் கூறுகிறார். தேங்காய் எண்ணெய்யுடன் இரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல் பயன்படுத்துவதால் இதன் மூலம் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் போன்றவை ஏற்படாது.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.