பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்வதோடு தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பறவைகள், விதைகளை எச்சம் மூலம் பரப்பி நகரம் மற்றும் கிராம பகுதிகளில் காடுகளை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் உள்ளிட்டவை வற்றிபோய் உள்ளன. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் படை எடுத்து வருகின்றனர். அதேபோல பறவை இனங்களும் தண்ணீர் இல்லாமல் சாலைகளில் மயங்கி விழும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2GzWhTqFAX5IeavVKQJu.jpeg)
இதனிடையே பறவைகளுக்கு தண்ணீர் அளிக்கும் விதமாக கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த சிட்டுக்குருவி ஆர்வலர் பாண்டியராஜன் என்பவர் கோவை மாநகர பகுதியின் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான தொட்டிகளை வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/JheSjZnSttS8DJe3cXjC.jpeg)
இது குறித்து ஆர்வலர் சிட்டுக்குருவி பாண்டியராஜன் கூறுகையில், தான் சிறு வயதிலிருந்து பறவை இனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தற்போது நிலவி வரும் கோடை வெயிலில் மனிதர்களுக்கே அருந்துவர்க்கு என அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. இவர்கள் தண்ணீர் தேவை என்றால் கடைகளில் வாங்கி அருந்தி கொள்வார்கள். ஆனால் பறவைகள் அப்படி செய்யமுடியாது.
/indian-express-tamil/media/media_files/BaHoeRM9snQmUoGoeBwB.jpeg)
இதனை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் பறவைகளுக்கு தான் தண்ணீர் வைத்து வருவதாகவும், அதேபோல் அனைவரும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் அல்லது சுற்று சுவர் பகுதியில் சிறிய அளவிலான பாத்திரங்களில் பறவைகளுக்கான தண்ணீரை ஊற்றி வைத்து பறவை உயிரினங்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“