/indian-express-tamil/media/media_files/2025/05/13/DMO6aXwLv0kJFQWuuqME.jpg)
வானில் ஒரு சுதந்திர பறவையை போல பறக்க வேண்டும் என்று ஒருமுறையாவது கனவு காணாதவர்கள் இருக்க மாட்டார்கள். அந்த கற்பனைகளுக்கு மேலும் சிறகுகள் சேர்க்கும் விதமாக, அதிவேகமான சில பறவைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
குன்றின் செங்குத்தான சரிவில் இருந்து பாய்வதோ அல்லது கடல்களின் குறுக்கே நீண்ட தூரம் பறப்பதோ எதுவாக இருந்தாலும், இந்தப் பறவைகளின் வேகம் அசாத்தியமானவை. உலகின் அதிவேகமான சில பறவைகளையும், அவை ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்பதையும் இங்கே காண்போம்.
பெரெக்ரின் ஃபால்கன் (Peregrine falcon):
பெரெக்ரின் ஃபால்கன் எனப்படுவது ஒரு வகையான வல்லூறு. பறவைகளின் உலகில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் இருந்தால், அது பெரெக்ரின் ஃபால்கன்-ஆக தான் இருக்க முடியும். மணிக்கு 389 கி.மீ வேகத்தை இந்தப் பறவையால் எட்ட முடியும். இது பெரும்பாலான ஃபார்முலா ஒன் கார்களை விட அதிகப்படியான வேகம் ஆகும். இந்த வகையான வல்லூறு அதன் புவியீர்ப்பு, வலுவான தசைகள் மற்றும் நேர்த்தியான உடலமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அதிவேகத்தை எட்டுகிறது.
கோல்டன் கழுகு (Golden eagle):
இந்த வகையான கழுகுகள் பெரிதாகவும், மூர்க்கமாகவும் இருக்கும். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக வேகமானவையும் கூட. வேட்டையின்போது, அவை மணிக்கு சுமார் 320 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். இது வேகமானது மட்டுமல்ல; வியூகரீதியானவை. குறிப்பாக, உயரத்தையும் வேகத்தையும் பயன்படுத்தி தங்கள் இரையை எளிதாக பிடிக்கின்றன.
சேக்கர் வல்லூறு (Saker falcon):
மத்திய கிழக்கு நாடுகளில் இவை பிரசித்தி பெற்றவை. இந்த வகையான வல்லூறுகளுக்கு அழகு மட்டுமின்றி வேகமும் அதிகமாக இருக்கும். இது சுமார் 200 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். இவை மிகவும் சுறுசுறுப்பானவை. இதனால் நடுவானில் இரையைப் பிடிக்க இது சரியானதாக இருக்கிறது.
ஊசிவால் குருவி (Common swift):
ஊசிவால் குருவிகள் கவர்ச்சியான உயிரினங்கள். இவை மணிக்கு 112 கி.மீ வேகத்தில் பறக்கும். குறிப்பாக, இந்தச் சிறிய பறவைகள் பறக்கும்போதே சாப்பிடவும், தூங்கவும், இனச்சேர்க்கை செய்யவும் முடியும்.
தேன்சிட்டு (Anna’s hummingbird):
இவ்வளவு சிறிய தேன்சிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள், ஆனால் தேன்சிட்டு ஆச்சரியங்கள் நிறைந்தது. இதன் கவர்ச்சியான இனச்சேர்க்கை பாய்ச்சலின்போது, மணிக்கு 98 கி.மீ வேகத்தை எட்டும். மேலும், அதன் உடல் அளவைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது, இது உண்மையில் போர் விமானங்களை விட வேகமாக நகர்கிறது.
இந்தப் பறவைகளின் வேகம் அவற்றுக்கு வேட்டையாட, ஆபத்திலிருந்து தப்பிக்க, இடம்பெயர அல்லது ஒரு துணையை ஈர்க்க என பல விதங்களில் உதவியாக இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.