கருத்தடை மாத்திரை உட்கொண்டால் பெண்களின் உடல் எடை கூடும், மேலும் கருத்தரிப்பது தாமதமாகக் கூடும் இல்லை வேறு விதமான பிரச்னைகள் எழலாம் என்ற பொதுவான கருத்து உள்ளது.
இதில் உள்ள உண்மை என்ன என்பதை, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பெங்களூரு இந்திராநகர் மதர்ஹூட் மகப்பேறு மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆஷா ஹிரேமத் பகிர்ந்துகொண்டார்.
அந்த வகையில், உடல் எடை அதிகரிப்பு என்பது ஒரு தற்காலிக பிரச்னையாகவே இருத்தல் கூடும் என அவர் கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு ஒரு பிரச்னையாக உள்ளது.
இது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், சில பெண்கள் சிறிது எடையை அதிகரிக்க முனைகிறார்கள், இது மாத்திரையின் தற்காலிக பக்க விளைவு என்று கருதப்படுகிறது.
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும்போது உடல் அதனை சரிபடுத்த அதிகரிப்பது போல் தோன்றும். இது ஒரு தற்காலிக திரவம்தான். மாறாக கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடுவது அல்ல.
ஹார்மோன் கருத்தடைகள் என்றால் என்ன?
டாக்டர் ஹிரேமத், ஹார்மோன் கருத்தடைகளில் புரோஜெஸ்டின்கள் நிறைந்துள்ளன, இது புரோஜெஸ்ட்டிரோனின் செயற்கை வடிவமாகும்.
இது ஒரு பெண் உடலில் உள்ள ஹார்மோனின் இன்றியமையாத வடிவமாகும்.
"புரோஜெஸ்டின்கள் பசியை அதிகரிக்கலாம், இது உங்களை அதிக உணவை உட்கொள்ள வைக்கும்.
கருத்தடைகளில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் அதிகப்படியான திரவம் தக்கவைக்க உதவுகிறது. ஒரு சில கருத்தடை மாத்திரைகள், மறுபுறம், ஈஸ்ட்ரோஜனின் மிக அற்பமான அளவுகளைக் கொண்டிருக்கின்றன; குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவுகள் கட்டுப்பாடற்ற எடை அதிகரிப்புக்கு ஒரு திட்டவட்டமான காரணம்” என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒருவர் கருத்தடை மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்த பிறகு, தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யலாம் என்று மருத்துவர் விளக்கினார்.
மேலும், சத்தான பழங்கள், காய்கறிகள், முட்டை, பருப்புகள் மற்றும் விதைகள் நிறைந்த புரத அடிப்படையிலான உணவை உட்கொள்ளல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“