தனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்? எப்படி சிறப்பாக கொண்டாடுவது?

வாழ்க்கையின் எளிய சந்தோஷமான, அன்பானவர்களின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை கூட உதாரணத்துக்கு, வேண்டுமென்றே குறைத்துக் கொண்டிருக்கின்றோம்.

how to celebrate birthdays when in quarantine, making someone's birthday special amid coronavirus health crisis, planning a birthday celebration, indian express, indian express news
how to celebrate birthdays when in quarantine, making someone's birthday special amid coronavirus health crisis, planning a birthday celebration, indian express, indian express news

நாம் எல்லோரும் சமூக ரீதியாக விலகலை கடைபிடித்திருக்கின்றோம். ஆனால், கிட்டதட்ட மொபைல் அல்லது ஆன்லைன் வழியே இணைந்திருக்கின்றோம்.

அண்மைகாலகட்டங்களில் மிகவும் மோசமான இந்த ஆரோக்கியமற்ற சூழல் வாழ்க்கையின் சின்ன, சின்ன கொண்டாட்டங்களைக் கூட குறைத்து விட்டது. வாழ்க்கையின் எளிய சந்தோஷமான, அன்பானவர்களின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை கூட உதாரணத்துக்கு, வேண்டுமென்றே குறைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் நமக்குள் சமூக விலகலைக் கடைபிடித்திருக்கின்றோம். கிட்டத்தட்ட ஆன்லையின் நாம் இணைந்திருக்க முடியும். உங்களுடைய ஒரு நண்பருக்கு அல்லது குடும்ப உறுப்பினருக்கு பிறந்த நாள் வந்தால், அவர்களுடன் நீங்கள் ஒரே இடத்தில் இணைந்திருக்க முடியாத சூழலில், அவர்களுக்காக, கொடுக்கப்பட்ட சூழலுக்குள் நீங்கள் மேலும் எவ்வாறு சிறப்பாக இருக்க முடியும் என்பதற்கான வழிகள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

அவர்களுக்காக கேக் தயாரிக்கவும்

பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் சார்பில் கேக்குகளைப் பேக்கிங் செய்து அவர்களுடன் அந்தப் படங்களைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்கள் எங்கேனும் வேறு ஒரு நாட்டில் தனிமையில் இருக்கும்போது, அவர்கள் இருக்கும் நாட்டின் உள்ளூர் நேரத்துக்கு ஏற்ப, தனிமையாக இருக்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படாமல் இருக்க இதைச் செய்யலாம். கேக்கில் மெழுகு வர்த்திகள் வைத்து அழகாக வடிவமைக்கவும். அவர்கள் சார்பாக வாழ்த்துத் தெரிவிக்கவும். அவர்களுடன் வீடியோ கால் பேசும்போது இது எல்லாவற்றையும் செய்யவும். இவைதான் அவர்களை உங்களோடு நெருங்கி இருக்கச் செய்யும்.

வீடியோ காஃன்பரன்ஸ்

இது போன்ற சூழல் இல்லை எனில் ஒரு பெரிய விருந்துக்கு உங்களை அழைத்திருப்பார்கள். இவை எல்லாம் சாத்தியமில்லை என்பதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் காஃன்பரன்ஸ் கால் வழியே இணைந்திருக்கலாம். அப்போது பிறந்த நாள் கொண்டாடுபவரை நலமாக இருக்கும்படி வாழ்த்தலாம். இப்படி வீடியோ கால் செய்வது, அந்த பிறந்த நாள் கொண்டாடும் நபரை முகம் மலரச்செய்யும். பிறந்த நாள் கொண்டாடும் நபர், அன்றைக்கு தனியாக இருப்பதையோ, தாழ்வாக இருப்பதையோ ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். சில நகைச்சுவைகளைச் சொல்லலாம். சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். வேடிக்கையுடன், சில ஜோக்குகளைச் சொல்ல லாம்.

உடை அணிந்து கொள்ளுங்கள்

வீடியோ காஃன்பரசில் வரும் எல்லோரும் நல்ல உடையணிந்து தயாராக இருக்கச் சொல்லவும். ஆம். இதற்காக சில முயற்சிகளை எடுக்க வேண்டும். அனைத்துமே பயனுள்ள ஒன்றுதான். உலகம் முழுவதும் நம்மில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால் மட்டும் நமது அலமாரியில் இருந்து தேடி சரியான உடையை தேர்ந்தெடுப்பதை நிறுத்தி விடமுடியாது. ஒவ்வொருவரும் தமது சிறப்பான தினத்தில், சிறப்பான உடையை அணிந்து கொள்வதை விரும்புகின்றனர். அவர்கள் அந்த சிறப்பான உடையை அணிந்து கொள்ள வலியுறுத்துவோம்.

சிறப்பாக சமைக்கவும்

இது ஒரு நெருங்கிய நண்பரின் அல்லது பெற்றோரின் பிறந்த நாளாக இருக்கலாம். எனவே அவர்களை கவுரவப்படுத்தும் படி எளிய அதே நேரத்தில் ஏதேனும் ருசியான ஒன்றை சமைக்கவும். சாத்தியமிருந்தால், அதே சமையலை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அது ஆன்லைன் விருந்தாக, பார்ப்பதற்கு வித்தியாமாக இருக்கும். இருக்காதா?

உங்களுக்குப் பிடித்தமான காட்சியை அல்லது திரைப்படத்தை பார்க்கவும்

நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகமுடியாது என்பதால், பிறந்த நாள் கொண்டாடும் நபரின் விருப்பத்தேர்வுக்கு ஏற்ப ஒரு திரைப்படத்தையோ அல்லது காட்சியையோ எல்லோரும் பார்க்கவும். ஒரு சிறப்பான உணர்வை அவர்களுக்குத் தர இது உதவும். இந்த நாள் அவர்களுக்கு மட்டுமானது என்பதையும் அவர்களிடம் சொல்லுங்கள்.

அவர்களுக்கான கொண்டாட்டம் என்ற ஆலோசனை என்பது, வெளியே போக முடியாது என்பதால் மட்டுமல்ல, நாம் வழக்கமாக மேற்கொள்ளும் விஷயங்களை செய்வோம். இந்த இனிய நாளின் சிறப்பில் ஏதும் குறை ஏற்பட்டு விடக் கூடாது என்ற அர்த்தத்தில்தான் இவ்வாறு செய்யப்படுகின்றது. இந்த சிக்கலான தருணத்தில் நாம் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Birthdays when in quarantine making someones birthday special amid coronavirus health crisis planning a birthday celebration

Next Story
கொரோனா நிதி உதவி: ஜன் தன் வங்கிக் கணக்கை ஆன்லைனில் தொடங்குவது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com