சிம்பிளான பிஸ்கட் ஹல்வா ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
விருப்பமான பிஸ்கட் - 10
எண்ணெய் - தேவையான அளவு
சர்க்கரை - 6 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
பிஸ்கட் ஹல்வா செய்ய முதலில் பிஸ்கட்டை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் தண்ணீர் ஊற்றி அது நன்கு கொதி வந்ததும் பிஸ்கட்டை கலந்து கொள்ளவும். அதை நன்கு கலந்து மாவு பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து தண்ணீர் வற்றி வரும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் டேஸ்டியான பிஸ்கட் ஹல்வா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“